நோ மாஸ்க்... சமூக இடைவெளி மீறல்.. களத்தில் இறங்கிய திருச்சி காவல்துறை - 2 நாளில் ₹ 5 லட்சத்துக்கு மேல் அபராதம்

நோ மாஸ்க்... சமூக இடைவெளி மீறல்.. களத்தில் இறங்கிய திருச்சி காவல்துறை -  2 நாளில் ₹ 5 லட்சத்துக்கு மேல் அபராதம்

திருச்சி

சோதனைச் சாவடிகள், காவல் நிலையங்களுக்கு உட்பட்ட 20 இடங்களில் போலீசாரின் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

  • Share this:
கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. திருச்சியில் 200க்கும் மேற்பட்டவர்கள் தொற்றாளர்களாக தினசரி கண்டறியப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் அரசு, தனியார் மருத்துவமனைகள் மட்டுமின்றி, பல்கலை., கல்லூரி வளாகங்களிலும் சிறப்பு சிகிச்சை மையங்களை  அமைத்துள்ளன. மாநகராட்சிப் பகுதிகளில் வார்டு வாரியாக காய்ச்சல் முகாம் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், திருச்சி மாநகரின் அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட 20 இடங்களில்  பொதுமக்களுக்கு நோய் பற்றியும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், முகக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துக்கூறி காவல்துறையினர்  விழிப்புணர்வு ஏற்படுத்தி, முகக்கவசம் வழங்கி வருகின்றனர். விழிப்புணர்வு மட்டுமின்றி தடுப்பு நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இதன்படி நேற்று முன்தினம்,  முகக்கவசமின்றி சுற்றிய  1174 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் தொகை  ரூபாய் 2,34,000 வசூலிக்கப்பட்டது.

தனிநபர் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் செயல்பட்டவர்கள் மீது 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ₹33,500- அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்றைய தினம்,  பொதுமக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பற்றியும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், முகக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு  முகக்கவசம் மற்றும் அறிவுரைகள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.  முகக்கவசமின்றி சுற்றித் திரிந்த 1600 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் தொகை சுமார் ரூபாய். 2,64,600- விதிக்கப்பட்டது,

தனிநபர் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் செயல்பட்டவர்கள் மீது 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய்.36,500 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இன்றும் சோதனைச் சாவடிகள், காவல் நிலையங்களுக்கு உட்பட்ட 20 இடங்களில் போலீசாரின் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். குறிப்பாக பேருந்தில் ஏறி, மாஸ்க் அணியாதவர்களுக்கு இதன் அவசியத்தை எடுத்துக் கூறி, விழிப்புணர்வூட்டி, முகக் கவசத்தை வழங்கினர் மேலும்,  கொரோனோ நோய்த்தொற்றைக் குறைப்பதற்கு காவல் துறையின் இதுபோன்ற நடவடிக்கை தொடரும் என்று  மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
Published by:Ramprasath H
First published: