Home /News /tamil-nadu /

ரூ.10 கோடி மதிப்பிலான திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் சொத்தை அபகரிக்க முயலும் பெண் போலீஸ்!

ரூ.10 கோடி மதிப்பிலான திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் சொத்தை அபகரிக்க முயலும் பெண் போலீஸ்!

அவர்கள் உருவாக்கி வைத்திருந்த கட்டுமானங்களை பொக்லைன் இயந்திரம் கொண்டு முற்றிலுமாக அகற்றினர்.

அவர்கள் உருவாக்கி வைத்திருந்த கட்டுமானங்களை பொக்லைன் இயந்திரம் கொண்டு முற்றிலுமாக அகற்றினர்.

அவர்கள் உருவாக்கி வைத்திருந்த கட்டுமானங்களை பொக்லைன் இயந்திரம் கொண்டு முற்றிலுமாக அகற்றினர்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுடன் இணைந்த, 'கத்ரி தயாராம் சிவ்ஜி' அறக்கட்டளைக்கு சொந்தமான, 58 சென்ட் பரப்பளவு கொண்ட நிலம், திருவானைக்கோயில் சிங்கப்பெருமாள் கோயில் பின்புறம் உள்ளது.

இந்த நிலத்தை சிலர், நேற்று இரவோடு இரவாக ஆக்கிரமிக்க முயற்சி செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த கோயில் இணை  ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி, மேலாளர் உமா, கோயில் வழக்கறிஞர் சீனிவாசன் மற்றும் கோயில் பணியாளர்கள்  இன்று ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலத்தை அதிரடியாக மீட்டனர்.

அவர்கள் உருவாக்கி வைத்திருந்த கட்டுமானங்களை பொக்லைன் இயந்திரம் கொண்டு முற்றிலுமாக அகற்றினர்.

இதையும் படிங்க - Exclusive : தஞ்சை மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்ன? - உண்மை அறியும் குழு விளக்கம்

போலீஸ் மீது புகார்

கடந்த, 2017ம் ஆண்டு முதல் தற்போது வரை, தொடர்ச்சியாக இந்த நிலத்தை அபகரிக்க முயலும், ஸ்ரீரங்கம் காவல்நிலைய பெண் போக்குவரத்து காவலர் மான்விழி, அவரது தந்தை சீனிவாசன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளித்துள்ளனர்.
Published by:Esakki Raja
First published:

Tags: Trichy

அடுத்த செய்தி