உரிய ஆவணமின்றி ரெம்டெசிவர் மருந்து கேட்டு மிரட்டல்... திருச்சியில் பரபரப்பு...

ரெம்டெசீவர் மருந்து கேட்டு மிரட்டியவர்

பலரும் ரெம்டெசிவர் வாங்க காத்திருக்கும் நிலையில் உரிய ஆவணமின்றி மருந்து கேட்டு மிரட்டியவர் குழந்தைவேலு, சேதுராமன் என்றும் இருவரில் ஒருவர் ஓய்வு பெற்ற போலீஸ்  இன்ஸ்பெக்டர் என்றும் தெரிவித்தனர்.

  • Share this:
திருச்சி பெரிய மிளகுப்பாறையில் உள்ள அரசு பிசியோதெரபி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவர் மருந்து கடந்த 8ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா பரிசோதனை சான்றிதழ், ரெம்டெசிவர் தேவைக்கான மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு, நோயாளி மற்றும் மருந்து வாங்க வரும் உறவினரின் ஆதார் அட்டை ஆகியவற்றைக் கொடுத்து மருந்தைப் பெற்றுக் கொள்ளலாம். போதிய மருந்து இருப்பு இல்லாததால், தினமும் 50 - 60 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் கொடுத்து, ஆவணங்களைச் சரிபார்த்த பின்னர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இரவு முதலே வந்து வரிசையில் காத்திருக்கின்றனர்.

குறைந்த எண்ணிக்கையில் விநியோகம் செய்யப்படுவதால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இந்நிலையில் ரெம்டெசிவர் மருந்து விநியோகம் செய்யும் பகுதிக்கு இன்று வந்த  இருவர், மருத்துவரின் பெயர் இல்லாத பரிந்துரைச் சீட்டைக் (பிரிஸ்கிரிப்ஷன்) கொடுத்து மருந்து கேட்டுள்ளார். பணியில் உள்ள மருத்துவர்கள், ஊழியர்கள் மருந்து கொடுக்க ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து மருந்து கேட்டு ஊழியர்களை மிரட்டினர். இதைப் படம் பிடித்த புகைப்படக் கலைஞர்களையும் ஒளிப்பதிவாளர்களையும் தரக்குறைவாகப் பேசினர்.

ரெம்டெசீவர் மருந்து கேட்டு மிரட்டியவர்


மேலும் படிக்க... புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகளுடன் அமலானது ஊரடங்கு.. பேருந்துகள் ஓடவில்லை.. நண்பகலுடன் கடைகளும் அடைப்பு..

பலரும் ரெம்டெசிவர் வாங்க காத்திருக்கும் நிலையில் உரிய ஆவணமின்றி மருந்து கேட்டு மிரட்டியவர் குழந்தைவேலு, சேதுராமன் என்றும் இருவரில் ஒருவர் ஓய்வு பெற்ற போலீஸ்  இன்ஸ்பெக்டர் என்றும் மற்றொருவர் அமைச்சரின் ஆதரவாளர்,  திமுகவினர் என்றும் அவர்களே தெரிவித்துக் கொண்டு மருந்து கேட்டு மிரட்டினர். பலரும் மருந்து வாங்க வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது, வரிசையில் நிற்காமல் கவுண்டருக்குள் சென்றனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் இருவரையும் அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: