Home /News /tamil-nadu /

திருச்சி மாநகராட்சி மேயர் யார்? அமைச்சர் கே.என்.நேரு தேர்வு இவர் தான்

திருச்சி மாநகராட்சி மேயர் யார்? அமைச்சர் கே.என்.நேரு தேர்வு இவர் தான்

திருச்சி மாநகராட்சி

திருச்சி மாநகராட்சி

Trichy Cororation Mayor | மேயர் பதவியை அன்பழகனுக்கு பெற்றுத்தர முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரைத்துள்ளதாக' தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைச்சர் கே.என்.நேரு கூறியிருந்தார்.

நகராட்சியாக இருந்த திருச்சி கடந்த 1994ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதற்குப்பின், 1996ம் ஆண்டு நடைபெற்ற, முதல் உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி 2001, 2006, 2011, 2022 என தற்போது வரை, 5 உள்ளாட்சித் தேர்தல்களை திருச்சி மாநகராட்சி சந்தித்துள்ளது. இவை அனைத்திலுமே திமுக வேட்பாளராக போட்டியிட்டு, தொடர்ந்து, 5வது முறையாக வெற்றிப் பெற்று சாதனை படைத்துள்ளார், திருச்சி மாநகர திமுக செயலாளரான அன்பழகன்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திருச்சி, 27வது வார்டில் போட்டியிட்டு, 5,430 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாஸிட் இழக்கச் செய்துள்ளார். திருச்சி மாநகரட்சி வரலாற்றில், தொடர்ச்சியாக, 5 முறை வெற்றி பெற்றுள்ள ஒரே வேட்பாளர் அன்பழகன் மட்டும் தான்.
ஏற்கெனவே, 2 முறை துணை மேயராக இருந்த அன்பழகனுக்கு, திருச்சி மாநகரத்தின் அனைத்துப் பகுதிகளும் அத்துப்படி.

'இம்முறை மேயர் பதவியை அன்பழகனுக்கு பெற்றுத்தர முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரைத்துள்ளதாக' தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைச்சர் கே.என்.நேரு கூறியிருந்தார். இதன்காரணமாக, அன்பழகனுக்கு இம்முறை மேயர் பதவி கிடைக்கும் என திமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Also Read : சென்னை வருவோர் கவனத்திற்கு... பாலாறு பாலம் பராமரிப்பு பணி நிறைவு

அன்பழகன் வரலாறு

கடந்த, 1980ம் ஆண்டு திமுகவில் இணைந்த அன்பழகன், 1990 முதல், 1999 வரை, திருச்சி மாநகர திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்துள்ளார். மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, 1996ல் நடத்தப்பட்ட முதல் தேர்தலில், முதலியார்சத்திரம் பகுதிகள் அடங்கிய அப்போதைய, 26வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதன்பின், 1999ல் திமுக மாநகரச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2001 உள்ளாட்சித் தேர்தலிலும், 26வது வார்டில் போட்டியிட்டு வென்றார். அப்போது, அதிமுக ஆளுங்கட்சியாக இருந்த நிலையிலும், மாநகராட்சி மாமன்றத்தில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் போட்டியிட்டு, முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சையைத் தோற்கடித்து, துணைமேயர் பதவியைக் கைப்பற்றினார்.

அடுத்ததாக, 2006ல் நடைபெற்ற தேர்தலில், பழைய 47வது வார்டில் வெற்றிப் பெற்று, திமுக ஆட்சிக் காலத்தில் துணைமேயராக பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து, 2011 தேர்தலின்போது, அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கில் கைதாகி திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்தபடி, பழைய, 32வது வார்டில் போட்டியிட்டு, பிரச்சாரத்துக்கே போகாமல் வெற்றி பெற்றார்.

அதையடுத்து, திருச்சி பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தற்போது, மாநகராட்சி, 27வது வார்டில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றிருக்கிறார்.
Published by:Vijay R
First published:

Tags: Local Body Election 2022, Trichy

அடுத்த செய்தி