டாஸ்மாக்கில் மதுபாட்டிலை வாங்கியதும் சென்றுவிடுவார்கள்; டீக்கடையில் அப்படியில்லை.. திருநாவுக்கரசர் எம்.பி.

திருநாவுக்கரசர் எம்.பி

அரசு அனைத்து சோதனைகளையும் செய்ய பின்னரே தடுப்பூசி செலுத்துகின்றது. ஆகவே அச்சமின்றி எந்த தடுப்பூசியாக இருந்தாலும் போட்டுக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

  • Share this:
    டாஸ்மாக் கடையில் பாட்டிலை வாங்கியதும் சென்று விடுவார்கள். ஆனால் டீக்கடையில் டீயை வாங்கிக்கொண்டு அங்கே தான் இருப்பார்கள் என்பதால் டீக்கடை திறக்கப்படவில்லை என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூர் மற்றும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு முகக்கவசங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது என்றால் அங்கு மதுபாட்டிலை வாங்கிக் கொண்டு உடனே சென்று விடுவார்கள், கூட்டம் கூடுவதற்கு வாய்ப்பில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால் டீக்கடைகள் ஏன் திறக்கப்படவில்லை என்றால் டீக்கடையில் டீயை வாங்கிக் கொண்டு மணிக்கணக்கில் அமர்ந்திருப்பார்கள். இதனால் கூட்டம் கூட வாய்ப்பிருக்கின்றது என்பதால் தான் திறக்கப்படவில்லை. அதுவும் இன்னும் ஒரு வாரத்திற்கு மட்டும் தான் என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், இந்த கொரோனா பேரிடர் காலத்தில் கோவாக்‌சின் சிறந்ததா? கோவிஷீல்டு சிறந்ததா என்பதை பற்றியெல்லாம் யாரும் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. எது அதிக அளவில் வருகின்றதோ அந்த தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றோம். அரசு அனைத்து சோதனைகளையும் செய்ய பின்னரே தடுப்பூசி செலுத்துகின்றது. ஆகவே அச்சமின்றி எந்த தடுப்பூசியாக இருந்தாலும் போட்டுக் கொள்ளுங்கள் என்று அவர் கூறினார்.

    செய்தியாளர் - ராமன்
    Published by:Esakki Raja
    First published: