• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விஜயபாஸ்கர் சகோதரர் வீட்டில் சோதனை நடத்தமுடியாமல் 3 மணிநேரம் காத்திருப்பு - 6 மாவட்டங்களில் தொடரும் சோதனை

விஜயபாஸ்கர் சகோதரர் வீட்டில் சோதனை நடத்தமுடியாமல் 3 மணிநேரம் காத்திருப்பு - 6 மாவட்டங்களில் தொடரும் சோதனை

விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை

விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் இலுப்பூரில் உள்ள வீடு, மதர்தெரசா கல்வி நிறுவனங்கள் உட்பட 29 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

  • Share this:
முன்னாள்  அமைச்சர் விஜயபாஸ்கர்  வீடுகளிலும், அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள் ஊழல் தடுப்பு &  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி, புதுக்கோட்டை, சென்னை  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட 6  மாவட்டங்களில் மொத்தம் 43 இடங்களில் சோதனை நடந்துவருகிறது. 

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது சகோதரர் உதயகுமார் வீடு,  கிராப்பட்டி காந்திநகர் முதல் தெருவில் உள்ள அவரது உறவினர்  மற்றும் உதவியாளர் குருபாபு என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில்,ஆய்வாளர் பிரசன்ன வெங்கடேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குருபாபுவின் கார், தண்ணீர் தொட்டி என தீவிர சோதனை நடத்தி வந்தனர்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமார் வீட்டில் சோதனை நடத்த முடியாமல் சுமார் 3 மணி நேரம் போலீசார் காத்திருந்தனர். திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமாரின் வீட்டிற்கு போலீசார் இன்று காலை 7 மணியளவில்  சென்றனர். வீடு  பூட்டபட்டிருந்தது.  இதையடுத்து அந்த வீட்டின் உள்ளே சென்று சோதனை செய்யும் பணி தொடங்கப்படாமல் இருந்தது. அந்த வீட்டை திறக்க சம்மந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கபட்டது.
பின்னர் சுமார் 3 மணி நேர காத்திருப்புக்கு பிறகு, உதவியாளர் ஒருவரை போலீசார் அழைத்து வந்து,  வீட்டை திறந்து சோதனை மற்றும் விசாரணையை தொடங்கினர்.

சோதனையில், உதயகுமார் வீட்டில் இருந்து கணக்கில் வராத, ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் தொழில் ரீதியிலான பணிகளை குருபாபுவும் கல்வி நிறுவனங்கள் சார்ந்த பணிகளை உதயகுமாரும் கவனித்து வந்துள்ளனர்.திருச்சியில் இவர்களது வீடுகளில் நடைபெறும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கிடைக்கும் என்கிற கோணத்தில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஒரு இடத்தில் சோதனை

திருச்சி கிராப்பட்டி காந்தி நகர் குருபாபு வீட்டில் நடந்த சோதனையில் கிடைத்த  தகவலின் அடிப்படையில், விஜயபாஸ்கரின் மற்றொரு நெருங்கிய நபரான எடமலைப்பட்டி புதூர், ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த, சிவா ரைஸ் மில் உரிமையாளர் சுதாகர் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில், 9 பேர் கொண்ட குழுவினர் தற்போது சோதனையை தொடங்கியுள்ளனர்.

புதுக்கோட்டையில் சோதனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் இலுப்பூரில் உள்ள வீடு, மதர்தெரசா கல்வி நிறுவனங்கள் உட்பட 29 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இலுப்பூரில் சோதனை நடைபெறும் விஜயபாஸ்கர் வீட்டிற்கு நகை மதிப்பீட்டாளரை வரவழைத்துள்ள போலீசார், நகைகளை மதிப்பிட்டு வருகின்றனர். விஜயபாஸ்கர் வீட்டின் முன்பாக அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பாதுகாப்பு பணிகளைப் பார்வையிட்டார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: