Home /News /tamil-nadu /

காணொலி காட்சியில் இருந்து கலைஞர் தொலைக்காட்சி... திருச்சி அரசு விழாவில் சுவாரஸ்யம்

காணொலி காட்சியில் இருந்து கலைஞர் தொலைக்காட்சி... திருச்சி அரசு விழாவில் சுவாரஸ்யம்

MK Stalin | திருச்சி தனியார் திருமண மண்டபத்தில்,மாவட்ட விவசாயிகளுடன் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

MK Stalin | திருச்சி தனியார் திருமண மண்டபத்தில்,மாவட்ட விவசாயிகளுடன் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

MK Stalin | திருச்சி தனியார் திருமண மண்டபத்தில்,மாவட்ட விவசாயிகளுடன் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று சென்னையில் நடந்த விழாவில், மின் இணைப்புக்கான ஒரு லட்சமாவது விவசாயியான, உளுந்தூர்பேட்டையை சேர்ந்த கண்ணுப்பிள்ளைக்கு முதல்வர் ஸ்டாலின் மின் இணைப்புக்கான ஆணையை வழங்கினார்.

திருச்சி மின் பகிர்மான மண்டலத்தை பொறுத்தவரை, திருச்சி பெருநகரத்தில் மட்டும், 3,115 விவசாயிகள், திருச்சி மின் பகிர்மான மண்டலத்தில், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில், 14,557 விவசாயிகள் என மொத்தம், 17,672 விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

காணொலி கலாட்டா

திருச்சி காஜாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருச்சி மாவட்ட விவசாயிகளுடன் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மேயர் அன்பழகன், எம்எல்ஏ பழனியாண்டி, திருச்சி மின் பகிர்மான மண்டல தலைமைப் பொறியாளர் அருள்மொழி, கண்காணிப்பு பொறியாளர் வீரமுத்து, செயற்பொறியாளர் முத்துராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Also Read : உப்புக்கல்லும் வைரமும் ஒன்றா? - இளையராஜாவை காட்டமாக விமர்சித்த கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி

திருச்சியில் இருந்து விவசாயி ஒருவர் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே காணொலி காட்சியில் ஆடியோ சொதப்பியது. இதனால், திருச்சியில் இருந்து விவசாயிகள் முதல்வரிடம் பேசும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. ஆனாலும், காணொலி நிகழ்வு தொடர்ந்து சொதப்பியதால், அமைச்சர் செந்தில் பாலாஜி, உதயநிதி ஸ்டாலின் பேச்சுகள், 'பாகுபலி' படத்தில் வரும் எதிரி அரசன் பேசும் புரியாத பாஷை போலவே இருந்தன.

கூட்டத்தில் உட்கார்ந்திருந்த விவசாயிகள் என்ன நடக்கிறது? என்பது புரியாமல் கொட்டாவி விட்டனர். சிலர் குறட்டை விட்டனர். மின்வாரிய அதிகாரிகளும் இந்த 'மயக்க' சிக்கலில் இருந்து தப்பவில்லை. முதல்வர் ஸ்டாலின் பேசும் நேரத்தில் என்ன செய்வது? என்று அதிகாரிகள் கையை பிசைந்து கொண்டிருக்க, திடீரென காணொலி காட்சியை நிறுத்திவிட்டு, கலைஞர் தொலைக்காட்சி நேரலையை ஒளிபரப்பி ஒரு வழியாக சமாளித்தனர்.
Published by:Vijay R
First published:

Tags: DMK, MK Stalin, Trichy

அடுத்த செய்தி