முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை அதிகரிப்பு... காரணம் இதுதான்

திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை அதிகரிப்பு... காரணம் இதுதான்

காந்தி மார்கெட்

காந்தி மார்கெட்

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததால் இரவில் அத்தியாவசியப் பொருளான காய்கறிகள், பால், மருத்துவ வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.

  • Last Updated :

திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைவாக இருப்பதால் காந்தி மார்க்கெட் சில்லரை விற்பனையில் நேற்றைவிட இன்று பெரும்பாலான காய்கறிகள் 5 ரூபாய் அதிகமாக விற்கப்படுகிறது. இதனால் காந்தி மார்க்கெட்டில் விற்பனை குறைவாகவே உள்ளது.

காந்தி மார்க்கெட்டைப் பொறுத்தவரை கொரோனா தொற்று அதிகரிகக்கும் என்பதால் கடந்த 11ஆம் தேதி சில்லறை வியாபாரம் டிவிஎஸ் டோல்கேட் அருகே ஜி கார்னர் மைதானத்தில் மாற்றப்பட்டது. ஆனால் வியாபாரிகள் அங்கு செல்லாததால் மொத்த வியாபாரம் அங்கு செல்ல வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்திடம் அறிவித்திருந்தது. இதுவரை வியாபாரிகள் அங்கு செல்லாததால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் 11 நுழைவாயில்களில் 3 நுழைவாயில்கள் மட்டும் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க... அமெரிக்க கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் மரண வழக்கில் தீர்ப்பு...

கடந்த ஆண்டும்இதேபோல  கொரோனா தொற்றால் திருச்சி காந்தி மார்க்கெட் ஜி கார்னர் மைதானத்தில் மாற்றப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: கதிரவன், மணப்பாறை

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Gandhi Market, Trichy, Vegetables