இந்து அமைப்புகளின் போராட்டம் காரணமாக, திருச்சி மலைக்கோட்டை கோயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டத்தின் அடையாளச் சின்னமாக விளங்குவது மலைக்கோட்டை. மலைக்கோட்டை அடிவாரத்தில், மாணிக்க விநாயகரும், மத்தியில் தாயுமான சுவாமியும், உச்சியில் உச்சிப்பிள்ளையாரும் அருள்பாலிக்கின்றனர். காதலர் தினமான இன்று, மலைக்கோட்டையில் குவியும் காதலர்களால் காதல் கோட்டையாக மாற்றப்படுவதை கண்டித்தும், காதலர் தினம் என்ற பெயரில், கோவிலுக்கு வந்து கலாச்சாரச் சீரழிவில் ஈடுபடுவதை கண்டித்தும்,கோயில் முன்பு, அகில பாரத வீர விவேகானந்தர் பேரவை, அனுமன் சேனா சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவிலுக்கு வரும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க, மஞ்சள் கயிறு உடன் கூடிய தாலி வழங்க, கையில் தாலியுடன் போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் முடித்து போராட்டக்காரர்கள் கோயிலுக்குள் நுழைய முற்பட்டனர். அதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
காதலருக்கு தடை
இந்து அமைப்புகளின் போராட்டம் காரணமாக, மலைக்கோட்டை கோயில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயிலுக்கு ஜோடியாக வந்த காதலர்களை தடுத்து நிறுத்தி, அவர்களை திருப்பி அனுப்பினர்.
செய்தியாளர்: விஜயகோபால் ( திருச்சி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.