Srirangam Chithirai Festival | ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோயில் சித்திரை தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது... கொரோனாவால் பக்தர்களுக்கு அனுமதியில்லை...

Srirangam Chithirai  Festival | ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோயில் சித்திரை தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது... கொரோனாவால் பக்தர்களுக்கு அனுமதியில்லை...

தங்கக் கொடிமரத்தில் இன்று கொடி ஏற்றப்பட்ட போது..

ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களிலும் கருட மண்டபத்தில் எழுந்தருளுகிறார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை.

  • Share this:
ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை புறப்பட்டு கொடி மண்டபம் வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க தங்கக் கொடிமரத்தில் இன்று கொடி ஏற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கண்ணாடி அறை சேவை. அதன் பின்னர்  பிற்பகல்  2.30 - 3.30 மணி வரை பேரிதாடனம் நிகழ்வும் மாலை 4. 30 மணியளவில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் புறப்பட்டு கருட மண்டபத்திற்கு வரும் நிகழ்வும் நடைபெறுகிறது. இதையடுத்து சந்தனு மண்டபத்தை அடைந்து, பின்னர் யாக மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளுகிறார். இரவு 10.30 மணிக்கு கண்ணாடி அறை சென்று சேருகிறார். தொடர்ந்து தினமும்  ஒவ்வொரு வாகனங்களில் கருட மண்டபத்தில் நம்பெருமாள்  எழுந்தருளுகிறார்.



முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேரோட்டம் நடைபெறவில்லை என்றும் நிகழ்வுகளில் பங்கேற்க பக்தர்களுக்கும் அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதனால் தேரோட்டத்தன்று காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் கருட மண்டபத்தில் எழுந்தருள உள்ளார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களின்றி  சுவாமி உள் புறப்பாடு மட்டும் நடைபெறுகிறது.

மேலும் படிக்க...  நாளை வாக்கு எண்ணிக்கை - பிற்பகலுக்குள் முன்னணி நிலவரம் தெரிய வரும்

மேலும் சித்திரைத் தேரோட்டத்தில் கிராமப்புறங்களில் இருந்து பக்தர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள். தற்போது பக்தர்களின்றியும் தேரோட்டம் நடைபெறாமல் இருக்கபோவதால்  பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். கோயிலுக்கும் மட்டும் சித்திரைத் தேர் விழா நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: