திருச்சி அருகே அடையாளம் தெரியாத இளம்பெண் அடித்துக்கொலை - போலீசார் விசாரணை!

திருச்சி அருகே அடையாளம் தெரியாத இளம்பெண் அடித்துக்கொலை - போலீசார் விசாரணை!

பெண்ணின் சடலத்தை தூக்கிச் செல்லும் போலீசார்

திருச்சி அருகே அடையாளம் தெரியாத இளம்பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 • Share this:
  திருச்சி அருகே அடையாளம் தெரியாத இளம்பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  திருச்சி மாவட்டம், லால்குடி அருகே எல். அபிஷேகம் கிராமம் உள்ளது. லால்குடியிலிருந்து கூகூர் செல்லும் பிரதான சாலையில் உள்ள ஆலம்மரத் தோப்பு பகுதியில் உள்ள ஆறுமுகம் என்பவரது வயலில் எள் செடிகளை பயிரிட்டுள்ளனர்.

  இந்த பயிர்களை, அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் இரவு பகலாக பாதுகாத்து வருகிறார். இந்நிலையில் ஆறுமுகம் வயலில் இன்று காலை 30 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத பெண் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையிலும், தலையில் பலத்த ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்

  இது குறித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் லால்குடி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் சடலமாக கிடந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சடலமாக கிடந்த பெண் மாநிறமாகவும், 5 அடி உயரமும், வெள்ளை சிகப்பு கலந்த சேலையும், சிகப்பு கலர் ஜாக்கெட் அணிந்திருந்துள்ளார். மேலும் அருகில் இருந்த ஒரு பையில் 6 புடவைகளும், இருந்துள்ளன. சம்பவம் தொடர்பாக ரவி என்பவரை பிடித்து லால்குடி போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  செய்தியாளர் - கதிரவன்

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: