கடந்த 26ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டியில் திருச்சியைச் சேர்ந்த வீராங்கனை தனலட்சுமி 100 மீட்டர் பிரிவில் 11.52 நிமிடத்தில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.
சர்வதேச வீராங்கனை டூட்டிச் சந்தை மீண்டும் பின்னுக்கு தள்ளி சாதனை புரிந்தார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேசிய பெடரேசன் போட்டியிலும் 100 மீ ஓட்டத்தில் டூட்டி சந்தை பின்னுக்கு தள்ளி தனலட்சுமி முதலிடம் பெற்றார். இவருக்கு சர்வதேச வீரர் மணிகண்டன் ஆறுமுகம் திருச்சியில் பயிற்சி அளித்தார்.

திருச்சி தடகள தங்கமங்கை தனலட்சுமி
இந்நிலையில், திருச்சி தடகள தங்கமங்கை தனலட்சுமி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் 4×400 மீட்டர் தொடர் ஓட்டம் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
திருச்சி குண்டூரைச் சேர்ந்த தனலட்சுமி, தற்போது பெங்களூருவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். தந்தை சேகர் இறந்து விட்டார். இவரது தாய் உஷா சேகர் மிகுந்த சிரமங்களுக்கு இடையில், வறுமையோடு போராடி, தோட்ட வேலை செய்து தனது 3வது மகளான தனலட்சுமியை சாதனையாளர் ஆக்கியுள்ளார்.
இதே போல் திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜுவும் ஒலிம்பிக் போட்டியில் 4*400 தொடர் ஓட்டத்தில் பங்கேற்க உள்ளார். இவர் ஏற்கனவே ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் தொடர் ஓட்டத்தில் பங்கேற்றவர். இந்திய ராணுவத்தில் சுபேதாராக உள்ள ராஜுவ் தற்போது இரண்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார்.
Also read: இப்படியுமா கொள்ளையடிப்பாங்க?.. எஸ்.பி.ஐ ஏ.டி.எம் கொள்ளையர்களின் பிளான்.. வெளியான புதிய தகவல்கள்..
அவருடன் நமது திருச்சி தலைமைச் செய்தியாளர் மகேஷ் நடத்திய பிரத்யேக கலந்துரையாடலில், "கொரோனா காலம், பொது முடக்கத்தில் மிகுந்த சிரமங்களுக்கு இடையே பயிற்சி பெற்றோம்.
நிச்சயம் பதக்கம் வென்று, தமிழ்நாட்டுக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பேன் என்று ஆரோக்கிய ராஜுவ் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒலிம்பிக் வீரர் ஆரோக்கிய ராஜுவ் நீயூஸ் 18 தமிழ்நாட்டின் 2017ம் ஆண்டு மகுடம் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.