நேபாளத்தில் நடைபெற்ற தடகளப்போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீரர்: கிராம மக்கள் உற்சாக வரவேற்பு

நேபாளத்தில் நடைபெற்ற  தடகளப்போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீரர்: கிராம மக்கள் உற்சாக வரவேற்பு

நேபாளத்தில்  நடைபெற்ற சர்வதேச தடகளத்தில் டேக்வாண்டா போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீரருக்கு குடும்பத்தினர், உறவினர்கள், கிராமமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

நேபாளத்தில்  நடைபெற்ற சர்வதேச தடகளத்தில் டேக்வாண்டா போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீரருக்கு குடும்பத்தினர், உறவினர்கள், கிராமமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

  • Last Updated :
  • Share this:
    நேபாளத்தில்  நடைபெற்ற சர்வதேச தடகளத்தில் டேக்வாண்டா போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீரருக்கு குடும்பத்தினர், உறவினர்கள், கிராமமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    நேபாள தேசிய விளையாட்டு அமைப்பு சார்பில்  அந்நாட்டில் கடந்த ஏப்ரல் 27முதல் 30வரை சர்வதேச ஊரக இளைஞர்களுக்கான தடகளப்போட்டிகள் மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றன.  ஓட்டப்பந்தயம், நீளம்தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டுஎறிதல் மற்றும் வட்டுஎறிதல் உள்ளிட்ட பல்வேறு  பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.

    மாவட்ட மற்றும் மாநில அளவில் நடந்த போட்டிகளில் சிறப்பாக பங்காற்றியவர்கள் தகுதிஅடிப்படையில் இந்த போட்டியில் பங்கேற்றிருந்தனர். இதில் திருச்சி மாவட்டம் ஜீயபுரத்தை அடுத்துள்ள எலமனூரைச் சேர்ந்த அண்ணாதுரை – கமலாநேரு தம்பதியினரின் மகன் அன்புதுரை பங்கேற்றார்.

    பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றபோதிலும்  தனது திறமையினால் மற்ற வீரர்களை வீழ்த்தி புள்ளிகளின் அடிப்படையில் தங்கப்பதக்கம் வென்ற அன்புதுரை, தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

    மேலும் படிக்க.. அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது திமுக  நடவடிக்கை

    தந்தையை இழந்து, தாயார் தற்காலிக ஆசிரியராக தனியார் பள்ளியில் பணியாற்றிவரும்நிலையில் டேக்வாண்டா விளையாட்டின் மேல் கொண்ட ஆர்வத்தால் தீவிர பயிற்சி மேற்கொண்டு சாதித்துள்ளார் அன்புதுரை.  தனது மகன் செய்துள்ள இந்த சாதனை இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ளதாக அவரது தாய் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

    தங்கம் வென்ற அன்புதுரை சேலத்தில் இருந்து திருச்சி மாவட்டம் எலமனூர் வந்தபோது,  உறவினர்கள், கிராம மக்கள் ஆகியோர் அவருக்கு உற்சாக வரவேற்பு  அளித்தனர்.  வெடி வெடித்தும், கேக் வெட்டியும் சால்வை அணிவித்தும் மலர் கொடுத்தும் அன்புதுரையை வரவேற்றனர்.

    தடகளப் போட்டியில் சாதனை படைத்தது குறித்து பேசிய அன்புதுரை,  பலரது உதவியாலும், கடின முயற்சியாலும் நேபாளத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், கொரோனா காலமாக இருந்தாலும் தொடர்ந்து கடின பயிற்சி பெற்று மேலும் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று திருச்சி மாவட்டத்திற்கு தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

     


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: