• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அருந்திய மதுவுக்கு பணம் கேட்டதால் ஆத்திரம்: டாஸ்மாக் பாரை சூறையாடிய மதுபிரியர்கள்!

அருந்திய மதுவுக்கு பணம் கேட்டதால் ஆத்திரம்: டாஸ்மாக் பாரை சூறையாடிய மதுபிரியர்கள்!

டாஸ்மாக் பார் சூறை

டாஸ்மாக் பார் சூறை

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ரகளையில் ஈடுபட்டது அப்பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகரின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் என்று தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share this:
திருச்சியில் டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு பணம் தர மறுத்த இளைஞர்கள், பாரில் உள்ள சேர், டேபிள், மது பாட்டில்களை உடைத்து  சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணப்பாறை - திருச்சி சாலை சந்தைப்பேட்டை பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை ஒன்று ஏசி பாருடன் செயல்பட்டு வருகிறது.
நேற்று இரவு அங்கு வந்த, 5 இளைஞர்கள் மதுபானத்தை வாங்கி குடித்துவிட்டு பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது.
பாரில் உள்ள பணியாளர்கள் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், பணியாளர்களை மிரட்டியுள்ளனர்.

மேலும், பாரில் உள்ள சேர், டேபிள்கள், மதுபான பாட்டில்களை உடைத்து, பாரை சூறையாடினர். இதைக்கண்டு பாரில் குடித்துக் கொண்டிருந்தவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து பார் உரிமையாளர் செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில், மணப்பாறை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: உத்தரபிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னையில் வேலை!


இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ரகளையில் ஈடுபட்டது அப்பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகரான மோகன்தாஸ்  மகன் தீபன் மற்றும் அவருடைய நண்பர்கள்  என்று தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: பில்லி சூனியம் எடுப்பதாக கூறி ₹80 லட்சம் ஏமாற்றி சொகுசு பங்களா கட்டிய குடும்பத்தினர்!


குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு  முழுவதும் கடந்த 2 நாட்களில் 2,513 குற்றப்பிண்ணனி உடையோர் மற்றும்  ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஆனால், பிரபல ரவுடிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே போதை இளைஞர்களால் டாஸ்மாக் பார் சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: