Home /News /tamil-nadu /

திருச்சியில் பணத்தை இறைத்த வேட்பாளர்களுக்கு அதிர்ச்சியை பரிசளித்த வாக்காளர்கள்!!

திருச்சியில் பணத்தை இறைத்த வேட்பாளர்களுக்கு அதிர்ச்சியை பரிசளித்த வாக்காளர்கள்!!

வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு

local body election 2022 | சூறாவளி பிரசாரம்; தடாலடி பண விநியோகம்; அதிர வைத்த பரிசுகள் என அனைத்தையும் ஏற்று, அமைதியுடன் ரசித்தனர் வாக்காள பெருமக்கள்.

திருச்சி மாநகராட்சியில் உள்ள, 65 வார்டுகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இத்தேர்தலில், திமுக, அதிமுக, பாஜக, அமமுக, காங்கிரஸ், இ.கம்யூனிஸ்ட், மா.கம்யூனிஸ்ட், தேமுதிக, மநீம உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என, 589 பேர் போட்டியிட்டனர்.

ஆளும் கட்சியான திமுக, முதல் முறையாக திருச்சி மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டது. எதிர்க்கட்சியான அதிமுக, சட்டசபை தேர்தலில் இழந்த வெற்றியை, இத்தேர்தலில் ஈடு செய்ய வேண்டும் என்று கடுமையாக பணியாற்றியது.

தனித்து போட்டியிட்ட பாஜகவும், திருச்சி மாநகராட்சியில் தங்களது கவுன்சிலர் கணக்கை துவக்கிவிட வேண்டும் என்ற பகீரத முயற்சியில் ஈடுபட்டது. இவர்களுக்கு சற்றும் சளைக்காத வகையில், அதிருப்தி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.

Also read:  பூணூல் அறுப்பு போராட்ட அறிவிப்புக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கண்டனம்

இறுதி அஸ்திரமாக, திமுக- அதிமுக ஆகிய கட்சிகள் தங்களது பணபலத்தை பரிசோதித்துக் கொண்டன. 'பசையுள்ள' மற்ற கட்சி வேட்பாளர்கள், சில சுயேட்சை வேட்பாளர்களும் இந்த கோதாவில் குதித்தனர்.

இதைத்தவிர, மூக்குத்தி, சால்வை, புடவை, விளக்கு, பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களையும் அள்ளி வீசினர்.

சூறாவளி பிரசாரம்; தடாலடி பண விநியோகம்; அதிர வைத்த பரிசுகள் என அனைத்தையும் ஏற்று, அமைதியுடன் ரசித்தனர் வாக்காள பெருமக்கள்.

ஆனால், அவர்களது அமைதி அனைத்தும் ஓட்டு எண்ணிக்கையாக மாறும் என்று எண்ணி இருந்த வேட்பாளர்களுக்கு, 'புறக்கணிப்பு' என்ற அதிர்ச்சியை அளித்துள்ளனர்.

காரணம் என்ன? 

திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள, 7 லட்சத்து 79 ஆயிரத்து 658 வாக்காளர்களில், 4 லட்சத்து 46 ஆயிரத்து 321 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதன்மூலம் மொத்தம், 57.25 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை, நகர்ப்புறங்களில் வசிக்கும் மேல்தட்டு மக்கள் வாக்களிக்கவில்லை. நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களே வாக்களித்து உள்ளனர். அவர்களும் முழுமையாக வாக்களிக்கவில்லை.

வாக்குப்பதிவு குறைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, 'பூத் சிலிப்' முறையாக விநியோகம் செய்யப்படாதது தான்.
வார்டுகள் வரையறை செய்யப்பட்டதால், புதிய வார்டுகளில், தங்கள் பெயர் எந்த வாக்குச்சாவடியில் எங்குள்ளது? என்று வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. அப்படியும் வாக்குச்சாவடி வந்த பலர் ஓட்டு போட முடியாமல் திரும்பிவிட்டனர்.

திமுகவும், அதிமுகவும் தேர்தல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டன - கமல் அட்டாக்

மேலும், திருச்சி மாநகராட்சியில் ஒட்டு இருந்து, வெளியூர்களில் பணியாற்றுபவர்கள் பலர் இத்தேர்தலுக்கு ஒட்டு போட வரவில்லை. ஊரகப்பகுதிகளில் பணியாற்றும் நகர்ப்புற வாக்காளர்களுக்கு விடுமுறை அளிக்கவில்லை.

வாக்குப்பதிவு குறித்து எத்தனை முறை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், மக்களுக்கு "வாக்கு" மீது நம்பிக்கை வரவில்லை. பணம் வாங்கியவர்கள் கூட பெரும்பாலான இடங்களில் ஓட்டுப் போட வரவில்லை என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

திருச்சி மாநகரத்தில் வாக்குப்பதிவு சதவீதம் தடாலடியாக குறைந்திருப்பது, அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Published by:Esakki Raja
First published:

Tags: Local Body Election 2022, Trichy

அடுத்த செய்தி