திருச்சியில் இருதரப்பினரிடையே மோதல்: காரணம் மணல் கடத்தலா? மது போதையா?

திருச்சி மோதல்

திருச்சியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்திவருகிறது.

  • Share this:
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே எசனைக்கோரை பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், தினேஷ், ராம்கி ஆகியோர் அப்பகுதியில் உள்ள அம்மன் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது, எதிரே வந்த கார் அவர்களை உரசியபடி சென்றதால், நிலை தடுமாறி விழுந்துள்ளனர்.

இதில், ஆத்திரமடைந்த மூவரும் காரில் சென்றவர்களைத் திட்டியுள்ளனர். இதையடுத்து காரில் இருந்த சிவானந்தம், மனோஜ் உள்ளிட்டோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் நின்று கொண்டிருந்த மூவரையும் காரில் வந்தவர்கள் தாக்கி விட்டு சென்றுள்ளனர். காயமடைந்த ராம்கி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையிலும் பாலகிருஷ்ணன், தினேஷ் இருவரும் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயம்பட்ட மூவரும் இதுகுறித்து தங்களது நண்பர்கள், உறவினர்களிடம் சொல்லியுள்ளனர். இதையடுத்து ராமதாஸ், ராமஜெயம் உள்ளிட்டோர் அருகில் உள்ள அப்பாதுறை கிராமத்திற்கு சென்று சிவானந்தத்தின் வீட்டை முற்றுகையிட்டு தாக்கியுள்ளனர். அப்போது சிவானந்தத்தின் ஓட்டு வீட்டு கூரையை உடைத்துள்ளனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று மோதல் வராமல் கட்டுப்படுத்தினர்.

மேலும், எசனைக்கோரை பகுதியில் பாலமுருகன் உள்ளிட்ட மூவரும் மது அருந்தி விட்டு பைக்கில் சென்ற போது காரில் மது அருந்து விட்டு சென்ற சிவனாந்தம் தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றி அடிதடியாக மாறியுள்ளது. ஆனால், மது போதையில் நடந்த தகராறை, மணல் கடத்தலால் தகராறு என்று திரித்து கூறுவதாக பாலமுருகன் தரப்பு தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இருதரப்பு மோதலுக்கு காரணம் மதுபோதையா? மணல் கடத்தல் போட்டியா?  என்பது குறித்து சமயபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிச் செல்கையில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார், இருசக்கர வாகனங்களையும் போலீசார் மீட்டு வைத்துள்ளனர்.
Published by:Karthick S
First published: