ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பிரியாணிக்கு கறி வாங்க கூட்டம் அலைமோதுற அளவுக்கு மவுசு - துறையூர் ஆடுகளுக்கு இப்படி ஒரு கதையா..?

பிரியாணிக்கு கறி வாங்க கூட்டம் அலைமோதுற அளவுக்கு மவுசு - துறையூர் ஆடுகளுக்கு இப்படி ஒரு கதையா..?

ஆடு

ஆடு

திருச்சி துறையூர் ஆடுகளுக்கு மவுசு அந்த ஊரைச் சுற்றியுள்ள ஊர்களில் கடுமையான கிராக்கி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவிற்கு உட்பட்ட மலை கிராமங்களான உப்பிலியபுரம், பச்சை மலை, புளியஞ்சோலை உள்ளிட்ட மலை கிராமங்களில் இருந்து, வளர்ப்பு ஆடுகளை  வியாபாரிகள் அதிகம் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். காரணம் பிரியாணி கறி, குழம்பு கறி சுவையில் துறையூர் ஆடுகளை அடித்துக் கொள்ள எந்த பகுதி ஆடுகளும் ஈடாகாது என்று கெத்தாக கூறுகின்றனர் அப்பகுதி வியாபாரிகள்.

மலைப் பகுதிகளில் வளர்க்கப்படும் ஆடுகள் அங்குள்ள இயற்கையான செடி, கொடிகளை தின்று வளர்கின்றன. அதிலும், மலைப்பகுதி என்பதால் பெரும்பாலான மூலிகை மரங்கள் செடிகள் இருப்பதால் இவற்றை உண்ணும் ஆடுகள் உடல்ரீதியாக, நல்ல ஆரோக்கியமாகவும் செழிப்பாகவும் வளர்கின்றன. இதனால்,  சுற்றுவட்டாரங்களில் உள்ள பெரிய இடைத்தரகர்கள், வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் செல்கின்றனர்.

அதிலும் திருமணம், கோயில் திருவிழா, கிடா வெட்டு போன்ற விழாக்களுக்கு நேரடியாக ஆடுகள் சப்ளே செய்யப்படுகின்றன. மேலும், சமயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள இடத்தில், பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் ஆடு வாரச் சந்தை நடைபெறும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது இந்த வாரச் சந்தைக்கு திருச்சி, துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆடுகள் வளர்ப்பவர்கள், வியாபாரிகள் வந்து ஆடுகளை விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல், இங்கு விற்பனை செய்யும் ஆடுகளை திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் வியாபாரிகள் துறையூர் ஆடுகளை கேட்டு அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.

First published:

Tags: Trichy