Srirangam Jeeyar: ஸ்ரீரங்கம் கோவில் ஜீயர் பதவிக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்: அறநிலையத்துறை அறிவிப்பு!

ஸ்ரீரங்கம் கோயில் 51வது ஜீயர் பதவி க்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஸ்ரீரங்கம் கோயில் 51வது ஜீயர் பதவி க்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

  • Share this:
ஸ்ரீரங்கம் கோயில் 51வது ஜீயர் பதவி க்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அரங்கநாத சுவாமி கோயில் நூற்று எட்டு வைணவத் தலங்களில் முதன்மையானது ஆகும். ஸ்ரீரங்கம் கோயிலின்  50வது ஜீயராக இருந்த ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் கடந்த 2018ம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து இன்னும் புதிய ஜீயர் நியமனம் செய்யப்படவில்லை.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோயிலின் 51வது ஜீயர் நியமனத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்பதவிக்கு தகுதியுடையோர் வரும் ஜுன் 8ம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று  இந்து அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு,  இந்து மத தென்கலை தென்னாச்சார்ய சம்பிரதாயத்தைச் சேர்ந்த, சந்நியாசம் பெற்ற, கோயில் ஆகமங்களையும் வழிபாட்டு முறைகளையும் அறிந்தவர்களே விண்ணப்பிக்க வேண்டும் உள்ளிட்ட தகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும்.  இப்பதவிக்கு நியமனம் செய்யப்படுவோர் தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறையின் 56(1) பிரிவின் கீழ் திருக்கோயில் நிர்வாகத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டவர், கட்டுப்படுத்தக் கூடியவர்  என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

.இந்த அறிவிப்பும் தகுதி, மாதிரி விண்ணப்ப படிவம் ஆகியவை கோயில் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க.. சீன ராக்கெட்டின் பாகம் இந்திய பெருங்கடலில் விழுந்தது...



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Murugesh M
First published: