திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் 27 பேருக்கு கொரோனா!

இலங்கை தமிழர்

திருச்சி  மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழகர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்தை  சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

  • Share this:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த இரவு ஊடங்கு, வார விடுமுறையில் முழு ஊரடங்கு, தடுப்பூசி முகாம் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல்,  பொதுமக்களிடம் கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில்,  பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 89 பேர் ,   வங்கதேசம், நைஜீரியா, சூடான், பல்கேரியா நாடுகளைச் சேர்ந்த 107 பேர் தற்போது உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் உள்ள வெளி நாட்டினருக்கும்  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில்  முதல்கட்டமாக  40 பேரின் முடிவுகள் கடந்த 22ம் தேதி வந்ததில், இலங்கையைச் சேர்ந்த 18 பேருக்கு தொற்று உறுதியானது.

தற்போது மேலும் 9 பேருக்கு தொற்று  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அனைவரும் பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனடையே, தண்டனைக் காலம் முடிந்தும் சிறப்பு முகாமில் தங்களை அடைத்து வைத்துள்ளதாக இலங்கை  தமிழகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கொடுமையான கொரோனா  காலத்திலாவது தங்களை விடுவிக்க வேண்டும் என சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தங்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி  தற்கொலை முயற்சி வரை சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Murugesh M
First published: