• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆடு திருட்டு கும்பலை துரத்திச் சென்ற எஸ்.ஐ கொலை : விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

ஆடு திருட்டு கும்பலை துரத்திச் சென்ற எஸ்.ஐ கொலை : விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன்

சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன்

திருச்சி நவல்பட்டு சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கில், 10 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

  • Share this:
    திருச்சி நவல்பட்டு சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கில் தஞ்சை மாவட்டம் கல்லணை தோகூரைச் சேர்ந்த 19 வயது இளைஞர் மணிகண்டன் மற்றும் 4ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன், 9ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர். சம்பவத்தன்று புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்துப்பட்டியில் மூவரையும் சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் மடக்கி பிடித்ததோடு, அவர்களிடம் இருந்த அரிவாளை தனது பைக்கில் வைத்துள்ளார்.

    பிறகு மணிகண்டனை விசாரித்து அவரது பாட்டியின் செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ள பூமிநாதன் முயற்சித்துள்ளார் இதனால் வீட்டிற்கு தெரிந்து விடுமோ என பயந்த மணிகண்டன், கணநேரத்தில் பைக்கில் இருந்த அரிவாளை எடுத்து சிறப்பு எஸ்.ஐ.யின் தலையில் வெட்டி கொலை செய்துள்ளார்.

    இந்த நிலையில் கைதான மூவரும் கஞ்சா, மதுவிற்கு அடிமையானவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. போதைக்கு அடிமையானதால் ஆடுகளை திருடி விற்று அதில் வரும் பணத்தில் மது அருந்தி வந்துள்ளனர். இதில் 4ம் வகுப்பு மாணவனின் சகோதரியைதான் மணிகண்டன் திருமணம் செய்திருக்கிறார். அவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிறப்பு எஸ்.ஐ.யை கொன்ற இந்த மூவர் மீதும் 302 பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சிறப்பு எஸ்.ஐ கொலை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சரக டிஐஜி, கொலையில் ஈடுபட்ட சிறுவர்கள் சிசிடிவி காட்சிகள் உதவியால் கைது செய்யப்பட்டதாகவும் காவல் அதிகாரியை பின்புறமாக இருந்து மூவரும் தாக்கியதாகவும் தெரிவித்தார். கொலையாவதற்கு முன் செல்போனில் பூமிநாதன் யாருடன் பேசினார் என ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: