• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தொடங்கிவிட்டன: அமைச்சர் கே.என்.நேரு!

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தொடங்கிவிட்டன: அமைச்சர் கே.என்.நேரு!

அமைச்சர் கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு

அதிமுக ஆட்சி காலத்தை விட தேர்தல் ஆணையம் இப்போது சுத்தமாக உள்ளது. அதிகாரிகள் நேர்மையாக உள்ளனர். ஆகையால்தான், 4 வாக்கு, 1 வாக்கு வித்தியாசத்தில் கூட திமுக வேட்பாளர்கள் தோற்றுள்ளனர் என்று கே.என். நேரு குறிப்பிட்டார்.

  • Share this:
    நகர்புற  உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் தேர்தல் ஆணையத்துடன்  கலந்துபேசி தேர்தல் நடத்தப்படும் என்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

    மாநில நிதிக்குழு நிதியுதவில், திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம்,  ரயில்வே சந்திப்பு  உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர்த் தொட்டி வளாகத்தில், ₹ 4.50 கோடி மதிப்பில் , 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய  மேல்நிலை குடிநீர்த் தொட்டி கட்டும் பணி  மற்றும் பிரதான உந்துகுழாய் பதிக்கும் பணி உள்ளிட்டவற்றை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு  செய்தியாளர்களிடம் கூறுகையில்,
    நகர்ப்புற (மாநகராட்சி, நகராட்சி) உள்ளாட்சித் தேர்தலை நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தேர்தலுக்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கி விட்டன. இதன்படிதான் கும்பகோணம் மாநகராட்சியாக தரம் உயர்த்திய உள்ளிட்ட அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.

    தேர்தல் ஆணையத்துடன் கலந்து பேசி, அவர்கள் சொல்லும் தேதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

    மேலும்,    ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் மிக நேர்மையாக நடைபெற்றது. தோல்விக்கு காரணம் சொல்ல வேண்டும் என்பதற்காக அதிமுக குறை சொல்கிறது.
    தமிழ்நாடு அரசு, முதலமைச்சரின் செயல்பாட்டுக்கு மக்கள் மகத்தான வெற்றியைத் தந்துள்ளனர்.

    மேலும் படிக்க: ஆழ் கடலுக்குள் கிரிக்கெட்: மெய் சிலிர்க்க வைத்த நீச்சல் வீரர்கள்!


    அதிமுக ஆட்சி காலத்தை விட தேர்தல் ஆணையம் இப்போது சுத்தமாக உள்ளது. அதிகாரிகள் நேர்மையாக உள்ளனர். ஆகையால்தான், 4 வாக்கு, 1 வாக்கு வித்தியாசத்தில் கூட திமுக வேட்பாளர்கள் தோற்றுள்ளனர். ஆனால், தோல்விக்கு காரணத்தை தேடி  குற்றம் சொல்கிறார்கள்.

    திருச்சி வருகை தரும் முதலமைச்சர்

    பக்தர்கள் சிரமம் போக்க, அனைத்து நாட்களிலும் கோயில்களைத் திறக்க முதலமைச்சர், அறநிலையத்துறை அமைச்சர் ஏற்கனவே முடிவு செய்து விட்டனர். இதைத் தெரிந்து கொண்டு பா.ஜ.க போராட்டம் நடத்தி, எங்களால்தான் கோயில் திறக்கப்பட்டது என்கிறார்கள்.

    இதையும் படிங்க: ஆஸ்கர் வழங்கும் அளவு நடித்தாலும் சசிகலாவை மக்கள் நம்ப மாட்டார்கள்: ஜெயக்குமார்!



    மேலும், திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்,  பல்வேறு இடங்களில் உயர்மட்ட பாலங்கள் உள்ளிட்டவற்றிற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பூர்வாங்க பணிகள் தொடங்கி விட்டான. முதலமைச்சர் வந்து அடிக்கல் நாட்ட உள்ளார் என்றார்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: