‘போலீஸ் எல்லாம் நமக்கு வேண்டியவங்கதான் - ரவுடிகளை பத்திரமா இருக்க சொல்லுங்க’: சாமியாரின் சர்ச்சை ஆடியோ!

சாமியார் பாலசுப்பிரமணியம்

தமிழக முதலமைச்சர் வீட்டிற்கு நேரில் சென்று வந்ததாகவும் அமைச்சர்கள் பலரும் தன்னிடம் ஜோசியம் கேட்பதற்காக வந்து செல்வதாகவும் அந்த ஆடியோவில் சாமியார் தெரிவித்துள்ளார். தற்போது ஆடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. வைரலாகியது

 • Share this:
  திருச்சியைச் சேர்ந்த  சாமியார் பேசுவதாக வெளியான  ஆடியோ வைரல் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது தனிப்படை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருச்சி மாவட்டம் அல்லித் துறையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரை பக்தர்கள் பாலாசாமிகள் என்றும் தேஜஸ் சுவாமிகள் என்றும் அழைத்து வருகின்றனர். இவர்  கரூர் மாவட்டம், குளித்தலை தாலுக்கா, ஒத்தக்கடையில் தக்ஷிண காளி என்ற காளி கோவிலை கட்டி வழிபாடு நடத்துவதுடன் அங்கு வரும் பக்தர்களுக்கு குறிசொல்லி வருகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த நிலையில் அவர் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் பாலசுப்ரமணியன், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கூறுகிறார். மேலும் தமிழகம் முழுவதும் 42 ரவுடிகள்  என்கவுண்டர் லிஸ்டில்  உள்ளதாகவும் அதில் 12 பேர் டெல்டா மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் உங்களுக்கு தெரிந்த ரவுடியை பத்திரமாக இருக்குமாறும் எதிர் தரப்பில் பேசும் வழக்கறிஞருக்கு அறிவுரை வழங்குகிறார்.

  அதோடு மட்டுமன்றி தமிழக முதலமைச்சர் வீட்டிற்கு நேரில் சென்று வந்ததாகவும் அமைச்சர்கள் பலரும் தன்னிடம் ஜோசியம் கேட்பதற்காக வந்து செல்வதாகவும் அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார். இந்த ஆடியோ வெளியாகி
  வைரலாகியது. இதனையடுத்து ஜீயபுரம் DSP செந்தில்குமார்,
  சாமியார் பாலசுப்ரமணியத்திடம் விசாரணை நடத்தினார்.

  மேலும் படிக்க: ஜல்லிக்கட்டு மாடு முட்டியதால் காயம் - நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்த இளைஞர்!


  இதனிடையே,  தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கில் யாரோ விஷமிகள் சிலர் தான் பேசுவது போன்று போலி ஆடியோ வெளியிட்டு உள்ளதாக சாமியார் பால சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க: சிக்கன் பிரியாணி வாங்க சில்லறையோடு குவிந்த மதுரைக்காரங்க...திறந்த வேகத்தில் மூடப்பட்ட புதிய ஓட்டல்!


  இது போன்ற விஷம செயலில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் கமிஷனரின் தனிப்படை போலீசார் சாமியாரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  பாலசுப்பிரமணியம், ஜெயக்குமார் என்னும் ஜெய், வழக்கறிஞர் கார்த்திக் உள்ளிட்ட 3 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

   
  Published by:Murugesh M
  First published: