ஊரடங்கு: மாற்றுத் திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கி உதவும் காவல் அதிகாரி!

போலீசார் உதவி

தனது சொந்த செலவில் ரூ.70 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்thu இந்த தொகுப்புகளை வாங்கியுள்ள ஆனந்தன், இவற்றை திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே நாகமங்கலத்தில் உள்ள பார்வையற்றோர் குடியிருப்பு பகுதியில் உள்ள 130 குடும்பங்களுக்கு நேரில் சென்று வழங்கியுள்ளார்

  • Share this:
தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வருவாய் இழந்து தவித்து வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் விதமாக காவல்துறை அதிகாரி ஒருவர் அவர்களின் வீட்டிற்கே சென்று மளிகை பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறார். 

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், இதனை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக ஜூன் 7ம் தேதிவரை முழு ஊரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கத்தால் பலரும் வருவாய் இழந்து தவித்து வருகின்றனர்.  அவர்களுக்கு உதவிடும் விதமாக தமிழக அரசு ரேஷன் மூலம் 4 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை, 13 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவற்றை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இந்நிலையில், திருச்சியைச் சேர்ந்த ஆனந்தன், தமிழ்நாடு சிறப்புக் காவல் முதலாம் படையணியின் கமாண்டண்ட் ஆக பணியாற்றி வருகிறார்.  ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில், அரிசி, காய்கறி, சர்க்கரை, பருப்பு என 13 வகையான பொருட்களை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கி வருகிறார்.

Must read: வாட்ஸ் அப் மெசேஜ்களை வேவு பார்க்கிறதா மத்திய அரசு?

தனது சொந்த செலவில் ரூ.70 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்து இந்த தொகுப்புகளை அவர் வழங்கி வருகிறார்.  இவற்றை திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே நாகமங்கலத்தில் உள்ள பார்வையற்றோர் குடியிருப்பு பகுதியில் உள்ள 130 குடும்பங்களுக்கு நேரில் சென்று வழங்கியுள்ளார்.

மேலும் படிக்க.. ஆண் நண்பர் இருப்பதை தெரிந்துகொண்டு மிரட்டினார்- பேராசிரியர் மீது முன்னாள் மாணவி குற்றச்சாட்டு...

மிக நெருக்கடியான காலகட்டத்தில் வீடு தேடி வந்து உதவிய அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.  சக காவலர்களுடன் இணைந்து  திருச்சி அரசு பொது மருத்துவமனையில் உள்ளவர்கள் உணவு வழங்கியுள்ள அவர், சாலையோர மக்களுக்கு உணவு வழங்கவும் திட்டமிட்டுள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Murugesh M
First published: