பிரஸ் ஸ்டிக்கர், சைரன் வைத்த கார்: அரசு அதிகாரி போல் வலம் வந்தவர் கைது!

கைது

செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வரும் கிரண்சிங்உரிய ஆவணங்கள் இன்றி காரில் சைரன் வைத்திருப்பதும் ப்ரஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதும் தெரியவந்தது. பொது மக்களை ஏமாற்றும் நோக்கத்தில் தன்னை அரசு அதிகாரி போல் காட்டிக் கொள்ள இவ்வாறு  முயற்சித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

  • Share this:
திருச்சியில் காரில் சைரன், பிரஸ் ஸ்டிக்கர் ஆகியவற்றுடன் அரசு அதிகாரிப் போல் சுற்றித் திருந்த நபரை போலீசார் கைது செய்தனர். 

திருச்சி மாவட்டம் காட்டூர் விக்னேஷ் நகரைச் சேர்ந்தவர் கிரண்சிங்(40). பெல் நிறுவன முன்னாள் செக்யூரிட்டி அலுவலர். இவர் அரசு அதிகாரி போல் தனது காரில் சுழல் விளக்கு ( சைரன்) பொருத்திக் கொண்டும், PRESS ஸ்டிக்கர் ஒட்டியபடி வலம் வந்துள்ளார். பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த கிரண்சிங் திருச்சி மாநகரம் தலைமைத் தபால் நிலையம் அருகே தனது காரில் இருந்துள்ளார்.

இது  குறித்து கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்து, நேரில் விசாரணை நடத்தினர்.விசாரணையில், தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வரும் கிரண்சிங்உரிய ஆவணங்கள் இன்றி காரில் சைரன் வைத்திருப்பதும் ப்ரஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதும் தெரியவந்தது. பொது மக்களை ஏமாற்றும் நோக்கத்தில் தன்னை அரசு அதிகாரி போல் காட்டிக் கொள்ள இவ்வாறு  முயற்சித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இதையடுத்து, மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.  காரை பறிமுதல் செய்து, கிரண்சிங்  மற்றும் அவரது ஓட்டுநர் மணிகண்டன் இருவரையும் கைது செய்தனர். நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி இருவரையும்  சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: காவலர் தாக்கியதில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு அறிவிப்பு


மேலும், திருச்சி மாநகரில் இது போல் போலியான நபர்கள், அரசு உத்தரவை மீறி காரில் சுழல் விளக்கு பொருத்தியபடி சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் பொது மக்களும் புகார் அளிக்கலாம் என்று மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

 
Published by:Murugesh M
First published: