ரெம்டெசிவிர் மருந்து விற்கப்படாததால் மக்கள் அதிருப்தி: போலீசாருடன் வாக்குவாதம்

திருச்சி  அரசு இயன்முறை சிகிச்சை கல்லூரியில்  இன்று முதல் ரெம்டெசிமர் மருந்து விற்கப்படும் என்று மருத்துவமனை முதல்வர் தெரிவித்திருந்த நிலையில்  ஞாயிறுக்கிழமை விடுமுறை என அறிவிப்பு பலகை இருந்ததால்  மருந்து வாங்க வந்திருந்தவர்கள் அதிருப்தி அடைந்து போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்

திருச்சி  அரசு இயன்முறை சிகிச்சை கல்லூரியில்  இன்று முதல் ரெம்டெசிமர் மருந்து விற்கப்படும் என்று மருத்துவமனை முதல்வர் தெரிவித்திருந்த நிலையில்  ஞாயிறுக்கிழமை விடுமுறை என அறிவிப்பு பலகை இருந்ததால்  மருந்து வாங்க வந்திருந்தவர்கள் அதிருப்தி அடைந்து போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்

 • Share this:
  திருச்சி  அரசு இயன்முறை சிகிச்சை கல்லூரியில் இன்று முதல் ரெம்டெசிமர் மருந்து விற்கப்படும் என்று மருத்துவமனை முதல்வர் தெரிவித்திருந்த நிலையில் ஞாயிறுக்கிழமை விடுமுறை என அறிவிப்பு பலகை இருந்ததால் மருந்து வாங்க வந்திருந்தவர்கள் அதிருப்தி அடைந்து போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

  திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால், கட்டுப்படுத்தப்பட்ட  பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர்  மருந்துக்கு தமிழகத்தில் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.  இதனால், கள்ளச்சந்தையில் பல்லாயிரம் ரூபாய்க்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

  இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக ரெம்டெசிவிர் மருந்து, அரசு மருத்துவமனையிலேயே கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த தமிழக அரசு கோவை, மதுரை, சேலம், நெல்லை, திருச்சி உள்ளிட்ட அரசு மருத்துவமனையில் குறைந்த விலையில் விற்பனை மையம்  தொடங்கப்படும் என அறிவித்தது.

  தமிழக அரசு அறிவிப்பை தொடர்ந்து திருச்சி அரசு இயன்முறை சிகிச்சை கல்லூரிக்கு நேற்று மாலை 3 மணி அளவில் 300 ரெம்டெசிவிர் மருந்துகள் வந்து சேர்ந்தன. இவற்றில் 180 மருந்துகள் நேற்று விற்பனை செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள மருந்துகள் இன்று விற்பனை செய்யப்படும் என மருத்துவமனை  டீன் வனிதா தெரிவித்திருந்தார்.  இதனால், மருந்தை வாங்க ஏராளமானோர் இன்று குவிந்தனர்.
  ஆனால் அரசு இயன்முறை சிகிச்சை கல்லூரி நுழைவாயில் முன்பு இன்று விடுமுறை என அறிவிப்பு பலகை வைத்திருந்ததால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: