Home /News /tamil-nadu /

5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த தமிழக செவிலியர்கள்

5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த தமிழக செவிலியர்கள்

தாரணி- சிவசங்கரி

தாரணி- சிவசங்கரி

திருச்சி மாநகராட்சித் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, 7 லட்சத்து 79 ஆயிரத்து 658 பேர். தடுப்பூசி செலுத்திய மாணவர்கள் உட்பட மக்கள் தொகை, 12 லட்சத்தை தாண்டாது. இதில், நான்கில் ஒரு பங்கு தடுப்பூசிகளை ஒரே ஒருவர் செலுத்துவது என்பது சாத்தியமே இல்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
திருச்சியைச் சேர்ந்த செவிலியர் தாரணி கடந்த ஓராண்டில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளார். இதேபோல், சென்னையை சேர்ந்த செவிலியர் ஒருவர் 2 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசியை செலுத்தியுள்ளார். இருவருக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் இவ்வளவு பேருக்கு எப்படி இவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்பது தொடர்பாக சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

திருச்சி மாநகரம் பீமநகரில் உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர் தாரணி. ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் இவர், அதிகளவு கொரானா தடுப்பூசிகள் செலுத்திய சாதனையை புரிந்துள்ளார். கடந்தாண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, 3 லட்சத்து 2 ஆயிரத்து 75 பேருக்கு, முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பு ஊசிகளை இவர் செலுத்தியுள்ளார்.

இவரை போலவே, சென்னையை சேர்ந்த செவிலியர் சிவசங்கரி, 2 லட்சத்து 306 தடுப்பூசிகள் செலுத்தி சாதனை புரிந்துள்ளார். வீடு, வீடாகச் சென்று தடுப்பூசிகளை செலுத்திய இவர்கள் இருவரது சேவையை பாராட்டி, மத்திய சுகாதாரத்துறை சார்பில், நாட்டிலேயே அதிக தடுப்பூசிகள் செலுத்தியவர்கள் என்ற விருது அறிவிக்கப்பட்டது.

டில்லியில் நடந்த விழாவில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியாவிடம், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் இவ்விருதை பெற்றுக் கொண்டார். அதிக தடுப்பூசிகள் செலுத்திய விருது அறிவிக்கப்பட்ட இரண்டு செவிலியர்களும் கொரானா தடுப்பூசிகள் செலுத்தும் பணியில் மிக சிறப்பாக ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ரூ.1 கோடி கேட்டு ஆசிரம உரிமையாளர் கடத்தல்.. மர்ம கும்பலை தேடும் போலீஸ்


இவர்களது பணியின் மீது எவ்வித ஐயமும் எழாத நிலையில், 'இவ்வளவு தடுப்பூசிகள் செலுத்துவது சாத்தியமா?' என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம். ஒரு ஊசி செலுத்த ஒரு நிமிடம் போதும். ஆனால், இவ்வளவு ஊசிகள் செலுத்த தொடர்ந்து, 8 மணி நேரம் ஊசி போட்டிருக்க வேண்டும். அதற்கேற்ப பொதுமக்களும் தொடர்ந்து வந்துக் கொண்டே இருந்திருக்க வேண்டும்.

குறிப்பாக, திருச்சி மாநகராட்சித் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, 7 லட்சத்து 79 ஆயிரத்து 658 பேர். தடுப்பூசி செலுத்திய மாணவர்கள் உட்பட மக்கள் தொகை, 12 லட்சத்தை தாண்டாது. இதில், நான்கில் ஒரு பங்கு தடுப்பூசிகளை ஒரே ஒருவர் செலுத்துவது என்பது சாத்தியமே இல்லை.

மேலும் படிங்க: கோவையை குறிவைத்து பணம் பறிக்கும் சைபர் கிரைம் கொள்ளையர்கள்.. 8 நாட்களில் ரூ.1 கோடி வரை திருட்டு..


உண்மையில், திருச்சி மாநகரப் பகுதியில், கடந்த, 2021ம் ஆண்டு முதல், தற்போது வரை, தடுப்பூசி செலுத்துவதற்கான 'கோவின்' இணையத்தளத்தின் 'லாகின்' செவிலியர் தாரணி பெயரில் வழங்கப்பட்டுள்ளது.

அதுவே, அவர் அதிகளவு தடுப்பூசி செலுத்தியவருக்கான விருதைப் பெற்று தந்துள்ளது. சென்னை செவிலியர் சிவசங்கரி விருது பெறவும் இதுதான் காரணம்' என்கின்றனர்.

 
Published by:Murugesh M
First published:

Tags: Corona Vaccine, Trichy

அடுத்த செய்தி