Home /News /tamil-nadu /

திருச்சி என்.ஐ.டி.யில் பங்களாதேஷ் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி என்.ஐ.டி.யில் பங்களாதேஷ் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி என்ஐடி

திருச்சி என்ஐடி

நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாதலால் உடைத்துகொண்டு உள்ளே சென்று பார்த்தபோது சௌரவ்சன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது.

    திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவன் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி  தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில்(NIT) தமிழகம் மட்டும் அல்லாது, பிற மாநிலங்கள், பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.  பங்களாதேஷ், குல்னா பாகர் ஹாட், சோலார் கோலா, காலிஷ் காலனியை சேர்ந்தவர் பாலுப்சன். இவரது மகன் சௌரவ்சன் (23) திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் தங்கி கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கல்லூரிக்கு கடந்த மாதம் 4-ஆம் தேதி தான் கொரொனா விடுமுறை முடிந்து வந்துள்ளார். கடந்த 29ம் தேதிதான் வகுப்பு தொடங்கியது. இந்தநிலையில் நேற்று மாலை அவருடன் பங்களாதேஷை சேர்ந்த சக மாணவர் அதே அறையில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    சௌரவ்சன் உடன் அறையில் தங்கியுள்ள மாணவர் வகுப்பு முடிந்து இரவு 7 மணிக்கு அறைக்கு திரும்பியுள்ளார். கதவு உள் பக்கம் தாழிடப்பட்டு இருந்துள்ளது. நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாதலால் உடைத்துகொண்டு உள்ளே சென்று பார்த்தபோது சௌரவ்சன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு: எவற்றுக்கெல்லாம் அனுமதி?


    இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துவாக்குடி போலீசார் செளரவ்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து சௌரவ்சன் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் படிங்க: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி

    Published by:Murugesh M
    First published:

    Tags: NIT, Suicide, Trichy

    அடுத்த செய்தி