Home /News /tamil-nadu /

28 ஆண்டுக்குப் பிறகு.. ஆண்கள் வசம் வந்த திருச்சி மாநகராட்சி

28 ஆண்டுக்குப் பிறகு.. ஆண்கள் வசம் வந்த திருச்சி மாநகராட்சி

திருச்சி

திருச்சி

Trichy : திருச்சி மாநகராட்சித் தேர்தலில், 65 வார்டுகளில், 50 இடங்களில் போட்டியிடுவது என திமுக முடிவு செய்துள்ளது.

    ‘மலைக்கோட்டை மாநகரம்’ என்று போற்றப்படக்கூடிய திருச்சி மாநகரம், கடந்த, 1866ம் ஆண்டு ஜூலை, 8ம் தேதி நகராட்சியானது. 128 ஆண்டுகளுக்கு பிறகு, 1994ம் ஆண்டில், அருகில் இருந்த ஸ்ரீரங்கம், பொன்மலை நகராட்சிகள், கோ. அபிஷேகபுரம், அரியமங்கலம் பேரூராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக உருவெடுத்தது.

    நிர்வாக வசதிக்காக, ஸ்ரீரங்கம், பொன்மலை, கோ.அபிஷேகபுரம், அரியமங்கலம் என நான்கு கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தம், 60 வார்டுகள் இருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி மேலும் விரிவுப்படுத்தப்பட்டு, தற்போது, 65 வார்டுகளாக உள்ளன. மாநகராட்சியின் மொத்த பரப்பளவான, 167.23 ச.கி.மீ.,யில், 3,857 தெருக்களில், 12 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது, மாநகராட்சியாகி, 25 ஆண்டுகளான நிலையில், வெள்ளி விழாவை கொண்டாடி வருகிறது திருச்சி மாநகராட்சி.

    மகளிர் மட்டும்

    திருச்சி நகராட்சியாக இருந்தபோது, திமுகவை சேர்ந்த பாலகிருஷ்ணன், கடைசி நகர்மன்றத் தலைவராக இருந்தார். திருச்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, மேயர் பதவி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டது. குறிப்பாக, திமுக கூட்டணியில், தமாகா, காங்கிரஸுக்கு அந்தப் பதவி விட்டுக் கொடுக்கப்பட்டு வந்தது. முதல் மேயராக புனிதவள்ளி பழனியாண்டி, தொடர்ந்து, எமிலி ரிச்சர்ட், சாருபாலா தொண்டைமான், சுஜாதா ஆகியோர் மேயராக இருந்தனர்.

    பெருமுனைப்புடன் திருச்சி மாநகராட்சியை கைப்பற்றிய அதிமுக, தனது கட்சியை சேர்ந்த ஜெயா என்பவரை மேயராக்கியது. இதன் பிறகு நீதிமன்ற வழக்கால் மாநகராட்சித் தேர்தல் தொடர்ந்து தள்ளிப் போனது. தற்போது நீதிமன்றத் தலையீடு காரணமாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆண்கள் வசம்

    இந்நிலையில், திருச்சி மேயர் பதவியை பொதுப் பிரிவுக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், 28 ஆண்டுகளுக்கு பிறகு ஆண் ஒருவர் 'மாநகரத் தந்தை' ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உள்ளூரில் அமைச்சர் அந்தஸ்துக்கு நிகராக வலம் வர உதவும் இப்பதவியை பிடிக்க, திமுக, அதிமுக கட்சிகளில் பலத்த போட்டி நிலவுகிறது.

    Also Read: ‘எனக்கு 50.. உனக்கு 15’ - நகர்புற உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு ஓவர்

    திருச்சி மாநகராட்சித் தேர்தலில், 65 வார்டுகளில், 50 இடங்களில் போட்டியிடுவது என்ற முடிவின் மூலம், திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு, மேயர் பதவி தங்களுக்கு தான் என்பதை உணர்த்திவிட்டனர். அதிமுகவும் இதே போன்றதொரு நிலைப்பாடு எடுத்து மேயர் பதவியை கைப்பற்ற முயற்சிப்பார்கள் என்று தெரிகிறது. இதற்கு பாஜகவின் எதிர்வினை என்ன? என்பது போக போகத்தான் தெரியும்.

    Also Read: திமுக கூட்டணி 200 வார்டுகளையும் கைப்பற்றும் - அமைச்சர் சேகர்பாபு

    ஆக மொத்தத்தில், திருச்சி மாநகராட்சி மேயர் பதவி ஆண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது அனைத்து கட்சிகளை சேர்ந்த ஆண்களுக்கும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதே கள நிலவரம்.

    செய்தியாளர் : விஜயகோபால் (திருச்சி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Local Body Election 2022, Politics, Tamilnadu, Trichy

    அடுத்த செய்தி