Home /News /tamil-nadu /

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. மேயரை 'கலாய்த்த' அமைச்சர் நேரு - பதவியேற்பில் சிரிப்பலை

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. மேயரை 'கலாய்த்த' அமைச்சர் நேரு - பதவியேற்பில் சிரிப்பலை

திருச்சி மேயர்

திருச்சி மேயர்

Trichy Mayor | சென்னைக்கு அடுத்த பெரு நகரமாக திருச்சி மாநகரத்தை உருவாக்க வேண்டும் என்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நேருவின் கனவை நிறைவேற்ற பாடுபடுவேன்

    திருச்சி மாநகராட்சியில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், திமுக மாநகரச் செயலாளரும், முன்னாள் துணை மேயருமான அன்பழகன், திருச்சி மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    ஆணையர் முஜிபுர் ரகுமான், அன்பழகனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க, அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அவரை மேயர் இருக்கையில் அமர வைத்தனர். மேயருக்குரிய அங்கியை (கவுனை) அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அமைச்சர் நேரு, "இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.." என்று கமெண்ட் அடிக்க,மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் சிவராசு, காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் உட்பட அனைவரும் குபீரென சிரித்தனர்.

    Also Read: நகர்மன்ற தலைவரான கணவர்.. கட்டித்தழுவி ஆனந்த கண்ணீர் விட்ட மனைவி

    அதன் தொடர்ச்சியாக இன்று மதியம், 2.30 மணியளவில் புதியவரும், இளையவருமான திவ்யா தனக்கொடி துணை மேயராக பதவியேற்று கொள்கிறார்.மேயர் பதவியேற்பு நிகழ்வில், அதிமுகவை சேர்ந்த, 3 கவுன்சிலர்கள் புறக்கணித்து இருந்தனர். அதேவேளையில், அமமுகவை சேர்ந்த கவுன்சிலர் செந்தில்நாதன் பங்கேற்று இருந்தார். அவருக்கு, மேயர் அன்பழகன் சால்வை அணிவித்தார்.

    மேயராக பொறுப்பேற்ற அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியபோது, "திருச்சி மாநகராட்சியை குப்பையில்லாத மாநகராட்சியாக்குவேன். சென்னைக்கு அடுத்த பெரு நகரமாக திருச்சி மாநகரத்தை உருவாக்க வேண்டும் என்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நேருவின் கனவை நிறைவேற்ற பாடுபடுவேன்.
    பராம்பரிய சிறப்புமிக்க திருச்சி மாநகராட்சியின் மாமன்ற கூட்டங்களை, கட்டுப்பாட்டுடன் கண்ணியமாக நடத்துவதுவேன்" என்றார்.

    செய்தியாளர் : விஜயகோபால் ( திருச்சி )
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Local Body Election 2022, Trichy

    அடுத்த செய்தி