திருச்சியில் சூதாடியதால் ஏற்பட்ட கடனை அடைக்க, 2 மாத குழந்தையை விற்ற தந்தை உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் உறையூர் கீழ பாண்டமங்கலத்தைச் சேர்ந்த அப்துல் சலாம் - கைருன்னிஷா தம்பதிக்கு4 குழந்தைகள் உள்ள நிலையில், 2 மாதத்திற்கு முன்பு மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்துல் சலாம் எந்த வேலைக்கும் செல்லாமல், நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கி சூதாடி வந்துள்ளார். தென்னூரைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவரிடம் 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதனை தர முடியாத நிலையில், புதிதாக பிறந்த குழந்தையை, ஆரோக்கியராஜ் கேட்டுள்ளார்.
அப்துல் சலாமும் தன் மனைவியிடம் பேசி, குழந்தையை வாங்கிக் கொடுத்துள்ளார். அதற்காக கூடுதல் பணமும் பெற்றுள்ளார். இதனிடையே, குழந்தைக்காக கணவன், மனைவி இடையே சண்டை ஏற்பட, கைருனிஷா குழந்தையை மீண்டும் கேட்டுள்ளார். அவர் வாங்கித்தர மறுக்கவே, உறையூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், அப்துல் சலாம், ஆரோக்கியராஜ், குழந்தையை வாங்கிய அவருடைய உறவினரான தொட்டியம் கீழசீனிவாசநல்லூரை சேர்ந்த சந்தனகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஆரோக்கியராஜின் உறவினர் பொன்னர் உள்ளிட்ட மூவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.