ஷவருடன் குளியல் தொட்டி: ஆனந்த குளியல்போட்ட மலைக்கோட்டை கோயில் யானை லட்சுமி!

ஆனந்த குளியல்

மழையில் நனைவது போன்ற ஷவரில் நனைத்து உற்சாகத்துடன் குளியலிட்டு மகிழ்ந்ததுடன், குளியல் தொட்டியில் இறங்கி லட்சுமி யானை ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தது

 • Share this:
  கோடைவெயிலிருந்து தப்பிக்கவும், மழையில் நனைந்து குளிப்பதுபோன்றும் 5லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட ஷவருடன் கூடிய குளியல் தொட்டியில் திருச்சி மலைக்கோட்டை கோவில் யானை லட்சுமி  உற்சாகமாக மகிழ்ச்சி பொங்க ஆனந்த குளியல் போட்டது.

  தென்கயிலாயம் என்றழைக்கப்படும் மலைக்கோட்டை மட்டுவார்குலழம்மை உடனுறை தாயுமானசுவாமி திருக்கோயிலில் கைங்கர்ய பணிகளுக்கான கோவில் யானை லட்சுமி வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானை ஓய்வெடுப்பதற்காக கோவில் வளாகத்திலேயே கொட்டகை இருந்தாலும், இயற்கை சூழலில் குளித்து மகிழ ஏதுவாக மலைக்கோட்டையின் உபகோயிலான அருள்மிகுநாகநாதசுவாமி திருக்கோவில் அருகில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில்  பிரம்மாண்ட ஷவர் உடன் கூடிய குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

  இன்றையதினம் கணபதி ஹோமத்தினைத்தொடர்ந்து இந்த யானை குளியல் மையம் திறக்கப்பட்டது. மழையில் நனைவது போன்ற ஷவரில் நனைத்து உற்சாகத்துடன் குளியலிட்டு மகிழ்ந்ததுடன், குளியல் தொட்டியில் இறங்கி லட்சுமி யானை ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தது. வரும்காலங்களில் வெயில் கடுமையாக இருக்கும் நிலையில், யானை அடிக்கடி குளிப்பாட்டுமாறு மாவட்ட வனஅலுவலரும், கால்நடை மருத்துவர்கள் அறிவித்த அறிவுரையைஏற்று இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: தேசிய அளவில் சிறந்த கல்வி நிலையங்கள்: அசத்தும் தமிழகம்
  கோவில் யானை லட்சுமி உற்சாகமாக குளித்து மகிழ்ந்ததை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்துடன் கண்டு மகிழ்ந்தனர். ஏற்கனவே திருவாணைக்காவல் யானை அகிலா, ஸ்ரீரங்கம் யானை ஆண்டாள் மற்றும் லட்சுமி குளிப்பதற்காக ஷவர் மற்றும் குளியல் தொட்டி அமைக்கப்பட்டு யானை குளிப்பாட்டப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்: ராமன்: மலைகோட்டை

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Murugesh M
  First published: