• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • துண்டு சீட்டில் நம்பர் எழுதி நூதன முறையில் லாட்டரி விற்பனை: 5 பேர் அதிரடி கைது

துண்டு சீட்டில் நம்பர் எழுதி நூதன முறையில் லாட்டரி விற்பனை: 5 பேர் அதிரடி கைது

லாட்டரி விற்பனை

லாட்டரி விற்பனை

₹ 30, ₹ 60, ₹ 120க்கு என லாட்டரி விற்பனை செய்யப்படுகிறது. பிற்பகலில் குலுக்கல் நடைபெற்று ₹  25, 000, ₹ 1 லட்சம் என ரொக்கத் தொகை வழங்கப்படுகிறது.

  • Share this:
திருச்சி மாநகரம் பொன்மலை பகுதியில் துண்டு சீட்டில் நம்பர் எழுதி  நூதன முறையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவது அதிகரித்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து துண்டு சீட்டு மூலம் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட  5 பேரை போலீசார் கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் வகையில் லாட்டரி சீட்டு விற்பனை தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், கேரளா உள்ளிட்ட வெளி மாநில லாட்டரி, ஆன் லைன் லாட்டரி என சட்ட விரோதமாக விற்பனை பல்வேறு மாவட்டங்களில் நடைபெறுவதும் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதும் தொடர்கிறது.

இந்நிலையில், திருச்சி மாநகரம் பொன்மலை ரயில்வே பணிமனை அருகே விவேகானந்தா நகர் வாத்தியார் குளம் பகுதியில் உள்ள முட்புதர் அருகே  தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இரயில்வே ஊழியர்கள்,   விவசாயக் கூலித் தொழிலாளர்களும்,  தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

குறிப்பாக பொன்மலைப் பகுதியில் சீமைக் கருவேல மரங்கள் நிறைந்துள்ள இந்த ஒரு இடத்தில் மட்டும் தினசரி ₹ 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இங்கு மட்டுமின்றி, திருச்சி மாநகரத்தில் அரியமங்கலம், காந்தி சந்தை,  பொன்மலை காவல் நிலையம், மாவட்ட புறநகர் பகுதியில் உள்ள திருவெறும்பூர் காவல் நிலைய பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அரசு அப்படிதான் சொல்லும்.. கூடுதல் விலைக்கு தான் சரக்கு விற்போம்: டாஸ்மாக் ஊழியர் அடாவடி


குறிப்பாக மறைவிடங்களில் அமர்ந்து கொண்டு, துண்டு சீட்டுகளில் எண்களைக் குறிப்பிட்டு கையெழுத்திட்டு, ₹ 30, ₹ 60, ₹ 120க்கு என லாட்டரியை விற்பனை செய்கிறார்கள். இவ்வாறு காலையில் விற்கப்படும் லாட்டரிகள் பிற்பகலில் குலுக்கல் நடைபெற்று முதல் பரிசு ₹  25, 000, ₹ 1 லட்சம் என பரிசுத் திட்டத்திற்கு ஏற்ப ரொக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. ரொக்கத் தொகை கிடைப்பது குறைவு என்றாலும் ஏமாறுவோரின் எண்ணிக்கையே அதிகம்.

இதில் அப்பாவி கூலித் தொழிலாளர்கள் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர்.  போலீசார் இதைத் தடுத்து நடவடிக்கை, அப்பாவிகளைக் காப்பாற்ற எடுக்க வேண்டும் என்றும் சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இந்நிலையில், திருச்சி பொன்மலை பகுதியில் நம்பர் லாட்டரி விற்பனை குறித்து சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியானதையடுத்து, திருச்சி மாநகரம் பொன்மலை காவல் உதவி ஆணையர் காமராஜ் , ஆய்வாளர் நிக்சன் உள்ளிட்டோர் பொன்மலை பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது  லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: