• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருச்சியில் ஊராட்சிமன்றத் தலைவரின் முறைக்கேட்டைக் கண்டித்து வார்டு உறுப்பினர்கள் மொத்தமாக ராஜினாமா

திருச்சியில் ஊராட்சிமன்றத் தலைவரின் முறைக்கேட்டைக் கண்டித்து வார்டு உறுப்பினர்கள் மொத்தமாக ராஜினாமா

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்

திருச்சியில் ஊராட்சிமன்ற தலைவர், கணவரின் தன்னிச்சையான அதிகாரப் போக்கை கண்டித்து ஊராட்சிமன்ற துணை தலைவர் வார்டு உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

  • Share this:
திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வாளசிராமணி ஊராட்சியில் திமுக ஆதரவுபெற்ற மகேஸ்வரி ஊராட்சிமன்றத் தலைவராக இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அவரது கணவர், மாமனார் கண்ணன் ஆகியோர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பொது குழாயிலிருந்து தங்களுக்கு தேவையான வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்வதும், மற்ற வார்டு உறுப்பினர்களுக்கு தேவையான திட்ட பணிகளை செய்யாமல், போலியான கணக்கு காட்டி அதிகாரிகளின் துணையுடன் பணத்தை அபகரிப்புச் செய்வது மற்றும் வட்டார அலுவலர்களால் ஒதுக்கப்பட்ட பணத்தை கவுன்சிலர்களுக்கு தராமல் இருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குடிநீர் இணைப்பு வழங்காமல், அடிப்படை வசதிகள் செய்யாமல் இருந்து வந்தது குறித்து ஊராட்சித் தலைவர் மகேஸ்வரியிடம் ஊராட்சி மன்றத் துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் பலமுறை முறையிட்டும் அலட்சியம் செய்த நிலையில், தற்போது நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்த திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் மற்றும் துணை தலைவர் தொடர்ச்சியாக எதேச்சை சர்வாதிகாரப் போக்குடன் செயல்படும் திமுக ஆதரவு ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் போக்கைக் கண்டித்து இன்றைய தினம் தங்களது துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்வதாககூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து முறையிட்டும் எந்தவித பலனும் இல்லாததால் தான் இந்த முடிவை மேற்கொண்டதாகவும் தெரிவித்தனர்.

செய்தியாளர்: கதிரவன், திருச்சி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: