• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ’முகக்கவசம் அணியுங்க’- விழிப்புணர்வு ஏற்படுத்திய லிட்டில் கிருஷ்ணர்கள்!

’முகக்கவசம் அணியுங்க’- விழிப்புணர்வு ஏற்படுத்திய லிட்டில் கிருஷ்ணர்கள்!

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணன் வேடம் தரித்த சிறுவர்கள், பொதுமக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு அவர்களுக்கு முக்கவசம் அளித்து அணிந்துகொள்ள வைத்தனர்.

  • Share this:
    திருச்சியில் முன்கள பணியாளர்களான மருத்துவர், செவிலியர், காவலர்கள், துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணர் வேடம் தரித்த சிறுவர்கள் முகக்கவசம் அணியும்படி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கிருஷ்ண பகவான் அவதரித்த தினமான கிருஷ்ண ஜெயந்தி இன்று உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் தங்கள் வீட்டில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கிருஷ்ணரின் பிறந்த தினத்தை கொண்டாடி வருகின்றனர்.,  பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்ய வேண்டும் என்ற கிருஷ்ண பகவான் போதித்த அறிவுரைகளை பரப்ப வேண்டிய இத்தருணத்தில் கொரோனா காலத்தில் மக்களை காக்கும் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட முன்கள பணியாளர்களான மருத்துவர், செவிலியர், காவலர்கள், துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் திருச்சியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    திருச்சி அரியமங்கலம் நேருஜி நகரில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்த சிறுவர் சிறுமியர்கள் 20க்கும் மேற்பட்டோர் முன்கள பணியாளர்களின் சிறப்பான பணியை பாராட்டும் வகையில் கையில் பதாகைகளை ஏந்தியபடி, முன்களப்பணியாளர்களின் கருத்துகளை ஏற்று நடக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை மற்றும் அரசு அறிவுறுத்தியபடி அனைவரும் தனிமனித இடைவெளியை பின்பற்றி, முகக் கவசம் அணிய வேண்டும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதை  வலியுறுத்தும் விதமாக பதாகைகளை கையில் ஏந்தியபடி நேருஜி நகர் மற்றும் ஏனைய பகுதிகளில் ஊர்வலமாகச் சென்றனர்.


    மேலும் படிக்க: அதர்மத்தை அழிக்க வந்த கிருஷ்ணரின் 8 முகங்கள்...


    அப்போது, முகக்கவசம் அணியாமல் இருந்தவர்களிடம் முகக்கவசம் வழங்கிய  ‘குட்டி’ கிருஷ்ணர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

    செய்தியாளர்: கதிரவன் -திருச்சி

    இதையும் படிக்க: பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே நாளில் இந்தியா 4 பதக்கங்கள் - ராமதாஸ் பாராட்டு

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: