திருச்சி ஐஐஐடியில் புதிய பாடப்பிரிவுகள்: இயக்குநர் தகவல்!

ஐஐஐடி

IIITயில் - தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கலை, அறிவியல் படிப்புகள்***-இயக்குநர் தகவல்

  • Share this:
தகவல் தொழில்நுட்பம் சார்ந்து கலை, அறிவியல் பட்டப்படிப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளதாகஇந்தியத் தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் திருச்சி வளாக இயக்குநர் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் சேதுராப்பட்டியில் 56 ஏக்கர் பரப்பளவில் இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனம்(IIIT) அமைந்துள்ளது. அரசு, தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ் (PPP) ஒன்றிய அரசின் பங்களிப்பு 50 %, தமிழ்நாடு அரசின் பங்களிப்பு 35%, தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு 15 % என மொத்தம் ₹ 128 கோடியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா பரவலால் தடைபட்டிருந்த கட்டுமான பணிகள்  தற்போது 200 தொழிலாளர்களைக் கொண்டு  விரைவாக நடைபெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிர்வாக கட்டடம், வகுப்பறைகள், மாணவ, மாணவியர் விடுதிகள் என  இந்த பணிகள் இரண்டு மாதத்தில் நிறைவு பெறவுள்ளன. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஐஐஐடியில் பி.டெக் கணினி அறிவியல் பொறியியல் (CSE), பி.டெக் மின்னணு மற்றும் தொலைத் தொடர்பு பொறியியல்(CSE) ஆகிய இரண்டு படிப்புகள் தற்போது பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. எம்.டெக், பி.எச்டி படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன.

 

இதையும் படிங்க:  5 வினாடி தாமதத்தால் ஏற்பட்ட விமான விபத்து!

இந்நிலையில்,ஐஐஐடியின்  3வது பட்டமளிப்பு விழா கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இணைய வழியில் வரும் 31ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்த ஐஐஐடி இயக்குநர் என்.வி.எஸ்.என் சர்மா, பதிவாளர் சீதாராமன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,  ஐஐஐடியில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்து கலை, அறிவியல் பட்டப்படிப்புகளையும் குறுகிய கால பட்டய படிப்புகளை  வழங்க  திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க: கொசஸ்தலை ஆற்றின் வேகம் காரணமாக ஏற்படும் உயிரிழப்பு: அரசு உதவ கோரிக்கை!


குறிப்பாக ஆன் லைன் ட்ரேடிங், டிஜிட்டல் பரிவர்த்தனைகள், இணைய வழி தொழில்கள் உள்ளிட்டவை குறித்தும் காலத்தின் தேவைக்கு ஏற்பவும் புதிய பாடப்பிரிவுகளைத் தொடங்க உள்ளதாகதெரிவித்த என்.வி.எஸ்.என்.சர்மா,  சேதுராப்பட்டி வளாகத்தில் உரிய உள்கட்டமைப்பு வசதிகளோடு விரைவில் வகுப்புகள் தொடங்கும் என்றார்.
Published by:Murugesh M
First published: