திருச்சி மாவட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்களுக்கு தண்டோரா போட்டு அறிவிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் குறித்து பார்க்கலாம்.
திருச்சி மாவட்டம் முசிறி கல்வி மாவட்டம் உப்பிலியாபுரம் அருகே வெங்கடாசலபுரம் ஊராட்சி ஒன்றிய அரசு உதவி மான்ய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வா.ரவிச்சந்திரன். கடந்த 2015 -16ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து தொற்று கடுமையாய இருந்த மே மாதத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் தலைமையாசிரியர் ரவி தன்னார்வலராக பணியாற்றினார்.
Also Read: Sasikala Audio: ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தாததே தேர்தல் தோல்விக்கு காரணம் - குற்றஞ்சாட்டும் சசிகலா
கிராமப் பகுதிகளில் கொரோனா, தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். சாலையோரவாசிகள், ஆதரவற்றவர்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.
இந்நிலையில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசின் கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதையடுத்து தான் பணிபுரியும் பள்ளியைச் சுற்றியுள்ள கிராமங்களில், தலைமையாசிரியர் ரவி தண்டோரா போட்டு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறிவிப்பு செய்து வருகிறார். இதில், மாணவர்களுக்காக கல்வித் தொலைக் காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதில், வகுப்புகள் நடைபெறும் அட்டவணையும் உள்ளது. எனவே, வீட்டில் இருக்கும் மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியைப் தொடர்ந்து பார்க்கவும். பெற்றோர்களும் மாணவர்களை கல்வித் தொலைக் காட்சியைப் பார்க்கச் சொல்ல வேண்டும் என்று அறிவித்தபடி செல்கிறார்.
Also Read: என்கிட்டயே சேவை வரி கேட்கிறாயா.. கத்தியுடன் பெட்ரோல் பங்கில் ரகளை செய்த இளைஞர்
இது குறித்து தலையாசிரியர் ரவியிடம் கேட்டதற்கு, கிராமப் புறம் நிறைந்த பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் 24 ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறேன். ஆகையால், மக்களோடு நெருங்கிப் பழகி வருகிறேன். கொரோனா தன்னார்வலராக பணியாற்றிய போது, கொரோனா குறித்து தண்டோரா போட்டதையும் அதனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டதை நேரில் பார்த்தேன்.
இதையடுத்து பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், படிப்பு தடைபடக் கூடாது என்பதற்காக மாணவர்களுக்கு முக்கியமாக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு செய்கிறேன். இதற்கு பள்ளி நிர்வாகம், கிராம மக்கள் நல்ல ஒத்துழைப்பு அளிக்கின்றனர் என்றார். பேண்ட், இன்னிங் சர்ட், ஷு அணிந்து டிப் டாப்பாக உடையணிந்து தண்டோரா போட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தலைமையாசிரியர் ரவியின் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.