இந்திய கடற்படைக்கு திருச்சி தொழிற்சாலையில் இருந்து அதிநவீன துப்பாக்கிகள் ஒப்படைப்பு!

இந்திய கடற்படைக்கு திருச்சி தொழிற்சாலையில் இருந்து அதிநவீன துப்பாக்கிகள் ஒப்படைப்பு!

நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் எஸ்.ஆர்.சி.ஜி 12.7 எம்.எம். நேட்டோ ரக துப்பாக்கியை பகல் மற்றும் இரவு நேரங்களிலும் பயன்படுத்தலாம். இலக்கை மிகத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.

  • Share this:
திருச்சி மத்திய பாதுகாப்பு துறையின் துப்பாக்கி தொழிற்சாலையில் இருந்து இந்திய கடற்படைக்கு அதிநவீன துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருச்சி படைக்கலத் தொழிற்சாலையில் (OFT) இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் தேவையான துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன. ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் இஸ்ரேல் நாட்டு நிறுவனத்துடன் இணைந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் SRCG (stabilised remote control Gun) ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் எஸ்.ஆர்.சி.ஜி 12.7 எம்.எம். நேட்டோ ரக துப்பாக்கியை பகல் மற்றும் இரவு நேரங்களிலும் பயன்படுத்தலாம். இலக்கை மிகத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. சிறிய மற்றும் பெரிய படகுகளிலும் பொருத்தி, இலக்கை தாமாக தேடி தாக்கும் தானியங்கி தொழில்நுட்பம் கொண்டுள்ளது. தானியங்கி தொழில் நுட்பத்தில் பழுது ஏற்பட்டால் இதனை கைகளாலும் இயக்க முடியும்.

Also read: நியூஸ்18 செய்தி எதிரொலி; புகார் கூறியவர்கள் வீட்டிற்கு சென்று மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு!

திருச்சி படைக்கலத் தொழிற்சாலையில் இதற்காக தனி பரிசோதனை இயந்திரமும் இங்கேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த SRCG 12.7 எம்.எம்.ரக துப்பாக்கியை இந்திய கடற்படை, கடலோர காவல் படைகளில், கப்பல்களில் பயன்படுத்தும் வகையில் ஒப்படைக்கும் நிகழ்வு, படைக்கலத் தொழிற்சாலை வாரியத் தலைவர் சி.எஸ்.விஸ்வகர்மா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில்,  OFT பொது மேலாளர் சஞ்சய் திவேதி முன்னிலையில் இந்திய கடற்படையின் மூத்த அதிகாரி கே.எஸ்.சி அய்யர் பெற்றுக் கொண்டார்.

பகல், இரவில் இலைக்கைத் துல்லியமாக தாக்கும் அதி நவீன இந்த துப்பாக்கிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது, கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் உள்ளது.

(பாதுகாப்பு காரணங்களால் ஒப்படைக்கும் நிகழ்விற்கு  ஊடகங்களுக்கு அனுமதியில்லை. )

 
Published by:Esakki Raja
First published: