குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனை - சிறப்பான செயல்பாட்டால் மக்கள் பாராட்டு

திருச்சி அரசு மருத்துவமனை

குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருவது பலரது பாரட்டுகளையும் பெற்றுவருகிறது.

 • Share this:
  நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில், கடந்த 2014ம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இந்த சிறப்பு மையத்தில் 2 மருத்துவர்கள், 2 ஆலோசகர்கள் உள்ளிட்ட 9 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

  இக்குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுக்குள் நுழைந்தால் மருத்துவமனைக்கு செல்வது போல் இல்லாமல், ஒரு பூங்காவில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளனர் நிர்வாகத்தினர். சுவர்களில் கார்ட்டூன்களும் வரையப்பட்டுள்ளன, காது கேளாத குழந்தைகளுக்கு நவீன முறையில் பயிற்சி அறையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

  மருத்துவமனைக்கு சென்றால் குழந்தைகளுக்கு பயம் ஏற்படுவதை மாற்றும் வகையில், விளையாட்டுப் பொருட்கள், கார்ட்டூன்கள் மற்றும் பல்வேறு ஓவியங்கள் வரைந்திருப்பதால், குழந்தைகள் மகிழ்ச்சியுடன் மருத்துவமனைக்கு வருவதாக கூறுகின்றனர் பெற்றோர்கள்.

  இதுவரை இதயக் கோளாறு தொடர்பாக 500 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாக கூறும் மருத்துவர்கள், 30 ஆயிரம் குழந்தைகள் வரை சிகிச்சை பெற்று உள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுமட்டுமில்லாமல் வாரத்தில் இரண்டு நாட்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு முகாம்கள் மூலமும் சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகிறது. குழந்தைகளுக்கான சிகிச்சையில் தனியாருக்கு இணையாக ஒரு அரசு மருத்துவமனை உருவெடுத்திருப்பது திருச்சி மக்களுக்கு வரமாக அமைந்துள்ளது.
  Published by:Karthick S
  First published: