தயங்காமல் முயன்றால் சாதிக்கலாம்: ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான திருச்சி வீராங்கனை நம்பிக்கை பேச்சு!

தனலட்சுமி

கொரோனா காலத்தில் கிடைத்த ஓய்வு , பயிற்சி பெறுவதற்கு  நல்ல வாய்ப்பாக இருந்ததாகவும். திருச்சியிலும் வெளியிலும் ஓராண்டுக்கு மேல் தொடர்ந்து கடுமையாக பயிற்சி பெற்றதாகவும் தனலட்சுமி கூறுகிறார்.

  • Share this:
விளையாட்டுத்துறைக்கு பெண்கள் தயங்காமல் வரவேண்டும் என்றும் சாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள திருச்சி  வீராங்கனை தனலட்சுமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜாப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு உலக நாடுகள் தயாராகி விட்டன. விளையாட்டு வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து பங்கேற்கும் தடகள வீரர், வீராங்கனைகள் 26 பேர் கொண்ட பட்டியலை தடகள கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதில், தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜுவ், தனலட்சுமி, சுபா, மதுரை ரேவதி &  நாகநாதன் பாண்டி  ஆகியோர் பங்கேற்கின்றனர். குறிப்பாக, சர்வதேச வீராங்கனைகளை இருமுறை முந்திய திருச்சி தனலட்சுமி 4×400 மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வானது தொடர்பாக  நியூஸ் 18 தமிழ் ஊடகத்துக்கு பேட்டியளித்த தனலட்சுமி, பெண்கள் விளையாட்டில் சாதிக்க வாய்ப்புகள் நிறைய உள்ளன. தயங்காமல் விளையாட்டுத்துறைக்கு வர வேண்டும். நம்பிக்கையோடு உழைத்தால் எல்லோரும் சாதிக்க முடியும் என்று நம்பிக்கை கூறுகிறார்.

கொரோனா காலத்தில் கிடைத்த ஓய்வு , பயிற்சி பெறுவதற்கு  நல்ல வாய்ப்பாக இருந்ததாகவும். திருச்சியிலும் வெளியிலும் ஓராண்டுக்கு மேல் தொடர்ந்து கடுமையாக பயிற்சி பெற்றதாகவும் கூறும் தனலட்சுமி,   ‘பெண்கள் விளையாட்டுத்துறைக்கு ஆர்வமாக வர வேண்டும். விளையாட்டுத்துறையில் பெண்கள் சாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே நம்பிக்கையோடு  கடின உழைப்பு  இருந்தால் எல்லோராலும் சாதிக்க முடியும்’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழகத்தை கேட்காமல் அணைக்கு அனுமதி கிடையாது- மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் உறுதி...


ஆரம்பத்தில் தன்னை விளையாட்டு பயிற்சிக்கு அனுப்ப  தயங்கியதாக கூறும் தனலட்சுமி,  அப்பா இல்லாத நிலையில் குடும்பத்தில் அம்மா, அக்கா நல்லா ஊக்கப்படுத்தினார்கள் என்றும்   தாயார் தன் மீது  நம்பிக்கை வைத்து அனுப்பி வைத்தார் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

 
Published by:Murugesh M
First published: