Home /News /tamil-nadu /

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாளாளர் - திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாளாளர் - திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

திருச்சி

திருச்சி

பள்ளி தாளாளர் ஜேம்ஸ் மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதையடுத்து பள்ளிக்கல்வித்துறை  பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

    பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு உதவிபெறும் பள்ளி தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    திருச்சி மாநகர் புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் CE மேல் நிலைப்பள்ளி உள்ளது. அரசு உதவி பெறும் அந்த பள்ளியின் தாளாளராக ஜேம்ஸ் என்பவர் உள்ளார். அந்த பள்ளியின் வளாகத்திற்குள்ளேயே மாணவ, மாணவியர்களுக்கான விடுதி செயல்படுகிறது. அந்த விடுதியில் தங்கி பள்ளியில் பயின்று வந்த மாணவி ஒருவரிடம் ஜேம்ஸ் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த மாணவி காவல் துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் உறையூர் காவல் நிலையத்தில் வைத்து ஜேம்ஸிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு விசாரணைக்கு பின் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

    Also Read:  அறிவியல் வகுப்பில் ஆபாச வார்த்தைகள்.. கரூரில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

    கல்வி துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து திருச்சி மகிளா நீதிமன்றத்தில் பள்ளி தாளாளர் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
    பள்ளி தாளாளர் ஜேம்ஸ் மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதையடுத்து பள்ளிக்கல்வித்துறை  பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

    செய்தியாளர்: இ.கதிரவன் (திருச்சி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், School student, Sexual abuse, Sexual harassment, Tamil News

    அடுத்த செய்தி