உரிய நேரத்தில் திறக்கப்படுமா மேட்டூர் அணை?: பாசனப் பாதையை உடனடியாக தூர்வார விவசாயிகள் கோரிக்கை

கோப்புப் படம்

நீர்வளத் துறைக்கு தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள விவசாயிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி உடனடியாக தூர் வாரும் பணியைத் தொடங்க கோரிக்கை விடுத்துள்ளனர்

  • Share this:
நீர்வளத்துறைக்கு தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள விவசாயிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி உடனடியாக தூர் வாரும் பணியைத் தொடங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டூர் அணையில் 90 அடிக்கு மேல் தண்ணீரும், போதிய நீர் வரத்தும் இருந்தால் காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு ஜுன் 12ம் தேதி அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் உரிய நீர் இருப்பும் வரத்தும் இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாக  ஜுன் 12ம் தேதி அணை திறக்கப்படுவது தொடரவில்லை.

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பின. மேட்டூர் அணையில் போதிய நீர் இருந்ததால் கடந்த ஆண்டு வழக்கமான ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம்  97 அடிக்கு மேல் உள்ளது. எனவே இந்த ஆண்டும் ஜூன்12ம் தேதி மேட்டூர் அணையை திறந்துவிட வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதேபோல், காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்துள்ள அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன், அதற்கு முன்னதாக ஆறு, ஏரி, குளம் மற்றும் பாசனப் பாதைகளை தூர் வார வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

விவசாயத்திற்கு தேவையான நீர் மற்றும் பாசனத்தை மேம்படுத்திட நீர்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைக்கப்பட்டு, துறைசார்ந்த அனுபவம் நிறைந்த துரைமுருகன் அமைச்சராகியுள்ளதை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

மேலும் படிக்க... நடப்பாண்டில் சிஎஸ்கே தான் சாம்பியன் - கவாஸ்கர்..

நடப்பாண்டில் எந்தவித குற்றச்சாட்டிற்கு இடம் தராமல் போர்கால அடிப்படையில் பாசன பாதைகளை  தூர் வாரும் பணிகளை உடனே தொடங்க வேண்டும். அதற்கேற்ப திட்டமிட வேண்டும். விரைந்து நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் ம.பா.சின்னதுரை வலியுறுத்தியுள்ளார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Murugesh M
First published: