சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு உணவு, முகக்கவசம்: திருச்சியில் நெகிழவைத்த மென்பொறியாளர்

கோப்புப் படம்

திருச்சியைச் சேர்ந்த மென்பொறியாளர் ஒருவர், சாலையோரத்தில் வசித்து வரும் ஆதரவற்றோருக்கு இலவசமாக உணவு, முகக்கவசம் ஆகியவற்றை வழங்கி கவனம் ஈர்த்து வருகிறார்.

  • Share this:
திருச்சியைச் சேர்ந்த மென்பொறியாளர் ஒருவர், சாலையோரத்தில் வசித்து வரும் ஆதரவற்றோருக்கு இலவசமாக உணவு, முகக்கவசம் ஆகியவற்றை வழங்கி கவனம் ஈர்த்து வருகிறார்.

திருச்சி மாநகரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கவின்குமார்(24). பொறியியல் பட்டதாரியான இவர், தனியார் நிறுவனமொன்றில் மென் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.  கொரோனா தாக்கம் காரணமாக திருச்சியில் தனது வீட்டிலிருந்து பணியாற்றி வரும் கவின்குமார், கவிதைகள் எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர். கவிதைகளை வெளியிட்டு அதன் மூலம் கிடைக்கும் சன்மானம் மற்றும் தனது நண்பர்கள் வழங்கும் நன்கொடை ஆகியவற்றை கொண்டு சாலையோர மக்களுக்கு உணவளித்து வருகிறார்.

வார நாட்களில் தனது அலுவலக பணிகளை கவனித்து வரும் கவின்குமார், வார இறுதி நாட்களில் தனது நண்பர்களுடன் இணைந்து இத்தகைய சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

வீட்டிற்கு அருகில் உள்ள உணவகத்தில் உணவுப் பொட்டலங்களை வாங்கி, இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், காவிரிப் பாலம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தேவைப்படும் நபர்களுக்கு அவற்றை வழங்குகின்றார்.

கொரோனா தொற்று தற்பொது வேகமாக பரவிவரும் நிலையில், உணவு பொட்டலங்களுடன் முகக்கவசத்தையும் இலவசமாக வழங்கி வருகிறார்.

சாலையோரவாசிகளுக்கு உணவு மட்டுமின்றி, ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் கவின்குமார் மற்றும் அவரது தந்தை வழங்கி வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்திலும் பிறர் பசி போக்க சேவையாற்றிவரும் கவின்குமாருக்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: