Home /News /tamil-nadu /

Trichy | நாயை அடித்து ஆட்டோவில் இழுத்துச் சென்ற போதை ஆசாமிகள் - திருச்சியில் பயங்கரம்.

Trichy | நாயை அடித்து ஆட்டோவில் இழுத்துச் சென்ற போதை ஆசாமிகள் - திருச்சியில் பயங்கரம்.

வாயில்லா ஜீவனை வதைக்கும் இளைஞர்கள்

வாயில்லா ஜீவனை வதைக்கும் இளைஞர்கள்

திருச்சியில் இளைஞர்கள் சிலர் நாய் வேட்டை ஆரம்பம் என கூச்சலிட்டவாறு நாய் ஒன்றினை ஆட்டோவில் இழுத்துச் செல்லும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ’

    திருச்சி பாலக்கரை கூனி பஜார் பகுதியைச் சேர்ந்த  இளைஞர் சிலர் மது, கஞ்சா போதையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய் ஒன்றை பிடித்து கல் மற்றும் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் நாய் மயக்கமடைந்துள்ளது.  இதனையடுத்து நாயை ஆட்டோ ஒன்றில் அமர்ந்தவாறு ரோட்டில் தரதரவென இழுத்து சென்றுள்ளனர். இவ்வாறு செல்லும் போது அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ  தற்போது வைரலாகி வருகிறது.

    Also Read: கோவையில் மாயாமான 10-ம் வகுப்பு மாணவி சடலமாக மீட்பு

    காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கூனி பஜார் பகுதியில் மது, கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் அந்த நாயை அடித்து நாய் வேட்டை ஆரம்பம் என  கத்தியவாறே ஆட்டோவில் இழுத்துச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து பாலக்கரை காவல் நிலைய போலீசார் தகவல் தெரிந்து யார் இந்த வீடியோவை பதிவு செய்தார்கள் நாயை அடித்து மயக்க நிலையில் இருந்த நாயை தரதரவென இழுத்துச் செல்லும் ஆட்டோ பதிவினை கொண்டு யார்  இந்த செயலில் ஈடுபட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.நாயை அடித்து துன்புறுத்தி அதன் கால்களை மட்டும் பிடித்து கொண்டு உடல் தரையில் இருக்க ஆட்டோவில் அதை இழுத்து செல்லும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    Also Read: ப்ளஸ் டூ மாணவிக்கு பாலியல் தொல்லை.. கட்டட மேஸ்திரி போக்சோ சட்டத்தில் கைது

    வாயில்லா ஜீவனை அடித்து கொலை செய்து ஆட்டோவில் இழுத்து செல்லும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர்: கதிரவன் (திருச்சி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Dog, Trichy, Video

    அடுத்த செய்தி