மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா? டாஸ்மாக் சர்ச்சை தொடர்பாக பாஜகவுக்கு கே.என்.நேரு பதில்!

டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு

மதுக்கடை திறப்பிற்கு பா.ஜ.க எதிர்ப்பு**மாமியார் உடைத்தால் மண்குடம். மருமகள் உடைத்தால் பொன் குடமா?*-அமைச்சர் கே.என்.நேரு

  • Share this:
பாஜக ஆளும் மாநிலங்களில் மதுபானக் கடைகளை திறந்துவிட்டு, தமிழகத்தில் டாஸ்மாக்கை திறந்தால் எதிர்ப்பதாக பாஜகவை அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணைத் தொகை ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். எம்.பி.க்கள் திருச்சி சிவா, திருநாவுக்கரசர், மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

பின்னர் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில், தேவையான அளவு கொரோனா தடுப்பூசி உள்ளது. தடுப்பூசி வர வர உடனடியாக அனைத்து பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிகளில் தற்போது முழுக் கவனம் செலுத்தப்படுகிறது. இதையடுத்து பல்வேறு திட்டப்பணிகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மதுக்கடைகளைத் திறக்க பா.ஜ.க எதிர்ப்பு தெரிவிப்பது குறித்த கேள்விக்கு, பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் மதுக் கடைகளை திறந்து விட்டு தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக் கடைகளை திறந்தால் எதிர்க்கிறார்கள். அவர்கள் மதுக்கடைகளைத் திறந்தால் சரி. மற்றவர்கள் திறந்தால் தவறா? மாமியார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன் குடமா? என்று விமர்சித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

மேலும், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து பல கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.இது போல் டாஸ்மாக் கடைகளுக்கும் அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது என்றார். கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம். ஆனால், அனைத்தையும் கேட்க இயலாது. இதனால் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் ஊரடங்கில் தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசை பாஜகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
Published by:Murugesh M
First published: