திருச்சியில், போலியோ சொட்டு மருந்து முகாமில் மாவட்ட ஆட்சியர் அருகே நின்று புகைப்படம் எடுத்தது தொடர்பான தகராறில் திமுக கவுன்சிலர்கள் பதவி ஏற்புக்கு முன்னரே அடிதடியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் இன்று போலியோ தடுப்பூசி முகாம் நடைபெற்றுவருகிறது. அதன்படி, திருச்சி பெரியமிளகுப்பாறை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் ஆட்சியர் சிவராசு கலந்துக்கொண்டு சொட்டுமருந்து முகாமினைத் தொடங்கிவைத்தார்.
அப்போது மிளகுப்பாறை பகுதியைச் சேர்ந்த 54வது வார்டு திமுக கவுன்சிலரான புஷ்பராஜ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு புகைப்படம், வீடியோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தபோது, கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த 55வது வார்டு திமுக கவுன்சிலரான ராமதாசும் ஆட்சியர் பங்கேற்ற நிகிழ்வில் பங்கேற்று ஆட்சியருக்கு பின்னால் நின்றுகொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
, இதனால் ஆட்சியர் நின்றுக்கொண்டிருந்தபோது எனது வார்டுக்கு எப்படி வரலாம் என புஷ்பராஜ் கேட்டபோது, பதலளித்துவிட்டு ராமதாஸ் அங்கிருந்து நகர்ந்தார். அதேநேரம் தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் மற்றும் போட்டோவுக்கு போஸ்கொடுப்பதில் திமுக கவுன்சிலர் ராமதாஸ் முந்திக்கொண்டதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன், ஆரம்ப சுகாதார மையம் முன்பு திமுக கவுன்சிலர்கள் மற்றும் ஆதரவாளர்களும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
இதையும் படிங்க: 3வது பெரிய கட்சியா? பல இடங்களில் டெபாசிட்டே காலி.. பாஜக மீது திருமாவளவன் விமர்சனம்
இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருவரையும் சமாதானப்படுத்த முயன்றும் தகாத வார்த்தைகளால் திட்டியவாறு அங்கே நின்றுக்கொண்டிருந்தனர்.வாக்களித்த பொதுமக்கள் முன்னிலையிலேயே கவுன்சிலராக பதவியேற்கும் முன்னரே திமுக கவுன்சிலர்கள் மற்றும் திமுகவினர் தாக்கிக்கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: கதிரவன் - திருச்சி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.