• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருச்சி தனியார் கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார்: தலையிட்ட மாவட்ட நிர்வாகம்- விசாகா கமிட்டி விசாரணை

திருச்சி தனியார் கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார்: தலையிட்ட மாவட்ட நிர்வாகம்- விசாகா கமிட்டி விசாரணை

பிஷப் ஹீபர் கல்லூரி

பிஷப் ஹீபர் கல்லூரி

திருச்சியில் கல்லூரி பேராசிரியர் மீது மாணவிகள் கொடுத்த புகாரில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டுள்ளது.

  • Share this:
திருச்சி மாநகரம் புத்தூரில் பிரபல தனியார் கலை, அறிவியல் தன்னாட்சி கல்லூரி (பிஷப் ஹீபர்) உள்ளது. இக்கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் மீது முதுகலை படிக்கும் மாணவிகள் 4  பேர் கையெழுத்திட்டு, கல்லூரியின் முதல்வர் பால் தயாபரனிடம் கடந்த மார்ச் மாதம் புகார் கொடுத்தனர்.

அதில், தமிழ்த்துறை தலைவர், பேராசிரியர் பால் சந்திரமோகன்,  வகுப்பறையில் தங்களுக்கு மிக நெருக்கமாக வந்து அமர்ந்துகொண்டு, காலால் சுரண்டுவது, இரட்டை அர்த்தம் வரும்படி கொச்சையாக பேசுவது என பல்வேறு பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார்.

மேலும், 'தமிழ்த்துறை பேராசிரியர் மாணவிகளைப் பார்த்து அவ்வப்போது, 'உங்கள் ஆண் நண்பருடன் அல்லது கணவருடன் இருசக்கர வாகனத்தில் போனால் என்ன மாதிரியான உணர்வு வரும்? பூங்காவில் காதலர்கள் அமர்ந்திருப்பதைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? என்றெல்லாம் ஆபாசமாக கேட்டார்.

வகுப்பறையில் குறைந்தளவு மாணவிகள் வந்திருந்தால், அவர்களை தன் அறைக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தினார். இதற்கு உதவிப் பேராசிரியை ஒருவரும் உடந்தையாக உள்ளார். இதனால் இந்தக் கல்லூரியிலிருந்து வெளியேற விரும்புவதாகவும்’ தெரிவித்தனர்.

இந்தப்புகாரின் அடிப்படையில், திருச்சியில் உள்ள மூத்த வழக்கறிஞர் ஜெயந்திராணி, கல்லூரியின் துணை முதல்வர் அழகப்ப மோசஸ், பேராசிரியர் சத்தியசீலன், பேராசிரியை வயலட் ஆகியோர் அடங்கிய பாலியல் புகார்கள் குறித்த உள் விசாரணைக்குழு (விசாகா கமிட்டி) கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை நடத்தியது.

புகார் கொடுக்கப்பட்ட தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன், உதவி பேராசிரியர் நளினி உள்ளிட்டோரிடம் விரிவான விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அறிக்கையையும் கல்லூரி முதல்வரிடம் அளித்துள்ளனர். பிரபல பிஷப் ஹீபர் கல்லூரியில் பாலியல் சீண்டல் என மாணவிகளின் புகார் உண்மையா...? பேராசிரியர்களுக்குள் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியினால் தூண்டப்பட்ட புகாரா? என்பது குறித்து கல்லூரி நிர்வாகம் விரைவில் அறிவிக்கும்.

நடவடிக்கை இருக்கும் என்றும் விசாகா குழு விசாரணை அறிக்கை கொடுக்கப்பட்டு 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளால், கல்லூரி திறக்கப்படாததால், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் கூறப்படுகிறது. மேலும், கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ள மாணவிகள் காவல்துறையில் தற்போது வரை புகார் அளிக்கவில்லை. தங்களின் கல்வி, எதிர்காலம் பாதிக்கும் என்பதால், வெளிப்படையாக புகார் அளிக்கவும் அச்சப்படுகின்றனர்.

இந்நிலையில், திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர்கள் மீது மாணவிகள் பாலியல் புகார் குறித்து, விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தமிமுன்னிஷா தலைமையில் கல்லூரியில் விசாரணை நடத்தினர். மாணவிகளிடமும் தொலைபேசியில் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணை அறிக்கை விரைவில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்படும். மேலும், குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள தமிழ்த்துறைத் தலைவர் பால் சந்திரமோகன், உதவிப் பேராசிரியை நளினி ஆகியோரை கல்லூரி நிர்வாகம் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விசாகா கமிட்டி விசாரணை அறிக்கை அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கையைப் பொருத்து, மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: