தயாரிப்பு தேதியும் கிடையாது, காலாவதி தேதியும் கிடையாது: 3 ஆயிரம் லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல்!

குளிர் பானம் பறிமுதல்

தேதி அச்சிடும் இயந்திரம் பழுதானதால் அச்சிடவில்லை என்றும் புதிய இயந்திரம் வாங்கி, தேதி அச்சிட்டு விற்பனை செய்வோம் என்று குளிர்பான நிறுவனத்தினர் உறுதியளித்துள்ளனர்.

  • Share this:
திருச்சி மாவட்டத்தில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் தயாரிக்கப்பட்ட 3 ஆயிரம் லிட்டர் குளிர் பானங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்டத்தில் காலாவதியான குளிர்பானங்கள் விற்கப்படுவதாக பொதுமக்கள் அளித்த  புகாரையடுத்து திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் பீமநகரில் உள்ள குளிர்பானம் தயாரிப்பு நிறுவனத்தில் திடீர்  சோதனை நடத்தினர்.

சோதனையில், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவை அச்சிடப்படாமல் தயாரிக்கப்பட்டிருந்த சுமார் 3 ஆயிரம் லிட்டர் குளிர் பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட குளிர் பானத்தின் மாதிரி சென்னை கிண்டியில் உள்ள அரசு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவிற்கு பிறகே, இதனுடைய தீங்குகள் குறித்து முழுமையாக தெரிய வரும்.

அதேநேரத்தில் காலாவதியான எந்த உணவுப் பொருளும் உடல் நலத்திற்கு தீங்கானது. இவற்றைக் கண்டறிந்து தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள குளிர்பான மாதிரியின்  பரிசோதனை முடிவுகள் கிடைக்க 20 -30 நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.  தேதி குறிப்பிடாமல்  குளிர்பானம் தயாரிக்க கூடாது என்று குளிர்பான நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்து, நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி: இஸ்லாமியர்கள் சார்பில் சிறப்பு பூஜை!


தேதி அச்சிடும் இயந்திரம் பழுதானதால் அச்சிடவில்லை என்றும் புதிய இயந்திரம் வாங்கி, தேதி அச்சிட்டு விற்பனை செய்வோம் என்று குளிர்பான நிறுவனத்தினர் உறுதியளித்துள்ளனர்.
இது குறித்த உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் R ரமேஷ்பாபு கூறுகையில், குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனங்கள் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாமல் குளிர்பானங்கள் தயாரித்து விற்பனை செய்ய கூடாது. விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் சட்டம் 2006ன் படி கடுமையான நடவிடக்கை எடுக்கப்படும் என்றார்.மேலும், பொதுமக்கள் உணவு கலப்படம் சம்பந்தப்பட்ட புகார்களுக்கு 99 44 95 95 95,  95 85 95 95 95  மாநில புகார் எண் 944 40 423 22 ஆகிய எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: மகாகவி பாரதி இறந்த நாளில் குழப்பம்: வரலாற்று பிழையை திருத்த கோரிக்கை!


இதனிடையே, பார்மலின் கலந்த மீன் விற்பனை நடைபெறுவதாகவும் இதனால் செரிமானக் கோளாறு, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதையடுத்து திருச்சி மாநகரில் உள்ள மீன் சந்தைகளில் திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டு, ஆயிரம் கிலோவிற்கு மேல் பார்மலின் கலந்த மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன. இந்த மீன்களை விற்பனைக்கு கொண்டு வந்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Murugesh M
First published: