• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருச்சியில் அதிகரிக்கும் கொரோனா: 24 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு

திருச்சியில் அதிகரிக்கும் கொரோனா: 24 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு

கட்டுப்படுத்தப்பட்ட பகுதி

கட்டுப்படுத்தப்பட்ட பகுதி

கொரோனா தொற்று அதிகரிப்பால் திருச்சி மாநகரில் 24 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன

  • Share this:
கொரோனா தொற்று அதிகரிப்பால் திருச்சி மாநகரில் 24 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரொனா இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் சூழலில் அதனை கட்டுப்படுத்த தொற்று கண்டறியும் பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.

இதேபோல், திருச்சி மாவட்டத்திலும் பலருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கண்டறிய இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 27 ஆயிரத்து 740 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 23 ஆயிரத்து 484 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.  246 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் மட்டும் 784 பேருக்கு கொரோன தொற்று  கண்டறிப்பட்டுள்ளது.  அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் தொற்றுக்கு உள்ளானோர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகம், சேதுராப்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரி  மற்றும் இரண்டு தனியார் கல்லூரிகளிலும் கொரோனா சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மூன்று நபர்களுக்கு மேல் தொற்று உறுதி செய்யப்படும் இடங்கள்,  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. இதன் காரணமாக திருச்சி மாநகரில் கோபி-அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், பொன்மலை, அரியமங்கலம் உள்ளிட்ட நான்கு கோட்டங்களில் 24 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதில் அதிகபட்சமாக கோ-அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட தில்லைநகர், திருச்சி அரசு மருத்துவமனை சுற்றுவட்டார பகுதி,  ராமலிங்க நகர், ஸ்ரீனிவாச நகர் உள்ளிட்ட 22 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவல் அதிகரிப்பால் திருச்சி பெல் தொழிற்சாலைக்கு   திங்கள் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை பெல் தொழிலாளர்கள் & குடும்பத்தினர் என 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால் பெல் வளாகத்தில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

 


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: