ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பிரசாந்த் கிஷோர் மந்திரவாதி அல்ல, காங்கிரஸில் அவர் இணையாதது நல்லது - திருநாவுக்கரசர் பாய்ச்சல்

பிரசாந்த் கிஷோர் மந்திரவாதி அல்ல, காங்கிரஸில் அவர் இணையாதது நல்லது - திருநாவுக்கரசர் பாய்ச்சல்

திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர்

Congress MP Thirunavukkarasar: பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கேட்டு கொண்டு ஆட்சி நடத்த முடியாது. அவர் பேசியதை அவரே கேட்டு ரசிக்க வேண்டியது தான் என்று திருச்சி எம்.பி., திருநாவுக்கரசர் காட்டமாக கூறினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான நிலம் ஒதுக்குவது தொடர்பான பிரச்னையில், கடந்த, 8 ஆண்டுகளாக திருச்சி அரிஸ்டோ மேம்பால பணி முழுமையடையாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான, 66 சென்ட் இடத்தை மத்திய அரசு ஒதுக்கியது. அதையடுத்து, பாலப்பணிகள் துவங்கியுள்ளன.

பாலப்பணிகளை, திருச்சி எம்.பி., திருநாவுக்கரசர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, "கடந்த, 8 ஆண்டுகளாக மேம்பாலப் பணி நிறைவடையாமல் இருந்தது. நான் தேர்தலில் போட்டியிடும் போது அரிஸ்டோ மேம்பால பணியை நிறைவு செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்று வாக்குறுதி அளித்திருந்தேன்.

Also Read: தியாகராஜர் தேரோடும் வீதிக்கு கருணாநிதி பெயரை சூட்டுவது சரியல்ல - அண்ணாமலை

அதன்படி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அதிகாரிகளை தொடர்ந்து சந்தித்து பேசினேன். தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் முயற்சி செய்தனர். ஏற்கனவே இருந்த திருச்சி எம்.பி., முன்னாள் அமைச்சர்களும் முயற்சி செய்தனர். தற்போது அந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது பிரதான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற உதவிய அனைவருக்கும் நன்றி.

இன்னும் நான்கு முதல், ஐந்து மாதங்களுக்குள் பாலப்பணிகள் நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும்.

அடுத்ததாக, திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு, 300 ஏக்கர் ராணுவ நிலம் தேவைப்படுகிறது. முதற்கட்டமாக அதில், 150 ஏக்கர் நிலத்தை பெறுவதற்கு முயற்சி செய்து வருகிறேன்.

மந்திரவாதி அல்ல

பாஜகவின் ஆதிக்கம், 30 ஆண்டுகளுக்கு இருக்கும் என்று சொல்லும் பிரசாந்த் கிஷோர் ஒன்றும் மந்திரவாதி இல்லை. அவர் காங்கிரசில் இணையாமல் இருப்பதே அவருக்கும் நல்லது கட்சிக்கும் நல்லது. எந்த ஒரு அரசும், எந்தவொரு சாம்ராஜ்யமும் நிலையாக தொடர்ந்து இருந்தது இல்லை. ராஜபக்ச சகோதரர்களை இலங்கை மக்கள் அன்று கொண்டாடினார்கள். இன்று அந்த மக்களுக்கு பயந்தே மஹிந்த ராஜபக்ச ஓடுகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் ஆட்சியை பிடிக்கும். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

Also Read: குடும்ப அரசியலுக்கும் மோடி விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார் - அண்ணாமலை

அண்ணாமலை மீது பாய்ச்சல்

"திருவாரூர் தெற்கு ரதவீதிக்கு, கருணாநிதி பெயர் வைப்பதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவிக்கிறாரா?" என்ற கேள்விக்கு, "பா.ஜ.க., தலைவர் அண்ணாமலையை கேட்டுக் கொண்டு ஆட்சி நடத்த முடியாது. மத்தியில் அவர்கள் ஆட்சியில் இருப்பதால், அவர் கண்டபடி பேசி வருகிறார். மக்களுக்கு என்ன தேவை என்பதை  அரசாங்கம் முடிவெடுக்கும். அதை மக்கள் ஏற்பார்களே தவிர, அண்ணாமலை எடுக்கும் முடிவை மக்கள் ஏற்க மாட்டார்கள். அண்ணாமலை பேசுவதை அவரே கேட்டு ரசித்துக் கொள்ள வேண்டியது தான்" என்றார்.மேலும், "பேரறிவாளன் விவகாரத்தில் நீதிமன்றம் எடுப்பது தான் இறுதி முடிவு. அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்" என்றார்.

Published by:Ramprasath H
First published:

Tags: Annamalai, BJP, Congress, Congress thirunavukarasar, Politics, Prashant Kishor, Thirunavukkarasar, Trichy