முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கல்லூரி மாணவி தற்கொலை: யூ டியூப் பிராங்க்ஸ்டர் மீது பெற்றோர் புகார்!

கல்லூரி மாணவி தற்கொலை: யூ டியூப் பிராங்க்ஸ்டர் மீது பெற்றோர் புகார்!

மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை

கடந்த 7ஆம் தேதி மதியம் சூர்யாவுடன் மாணவி பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனமுடைந்து காணப்பட்ட மாணவி வீட்டில் தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருச்சி மாவட்டத்தில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் அவருடன் நெருங்கி பழகிவந்த யூடியூபர் சூர்யா என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இருவரின் செல்போன் அலைப்புகள் உள்ளிட்டவற்றை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர்  திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி காட்சித் தகவலியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ஒளிப்பதிவில் ஆர்வம் கொண்ட இவர், யூ ட்யூப்பில் பிராங் வீடியோக்களை பகிர்ந்து வரும் பிராங்க் பாஸ்  சூர்யா என்பவருடன் நெருங்கிப் பழகியுள்ளார். பழக்கம் காதலாகியதாக கூறப்படுகிறது.

தனது தாயிடம் அடி வாங்குவது போன்று பிராங்க் செய்து பல்வேறு வீடியோக்களை யூ டியூப்பில் சூர்யா பதிவேற்றியுள்ளார். இதன் மூலம் சமூக ஊடகங்களில் கவனம் பெற்றவராகவும் அவர் திகழ்ந்துள்ளார்.  இந்த புகழ் போதை காரணமாக வேறு பெண்கள் சிலரோடும் சூரியா நெருங்கிய நட்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சூர்யாவுக்கு கல்லூரி மாணவிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் கத்தி முனையில் கல்லூரி மாணவர்களிடம் கைவரிசை.. 6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி மதியம் சூர்யாவுடன் மாணவி பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனமுடைந்து காணப்பட்ட மாணவி வீட்டில் தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார். மயங்கிய நிலையில் அவரை மீட்டு,  திருச்சியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர்.

உடனடியாக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு மாணவி கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்  ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து உயிரிழந்த மாணவியின் தாய்  நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில், யூ ட்யூப்பர் சூர்யா தான் தனது மகளின் இறப்புக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து,  நவல்பட்டு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருச்சி கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக யூ ட்யூப்பர் சூரியாவை போலீசார் தேடி வருகின்றனர். இருவரின் செல்போன் அழைப்புகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

First published:

Tags: Arrest, News On Instagram, Sucide, Trichy